Home>>இந்தியா>>மத்திய அரசின் கேலோ இந்தியா விளையாட்டுத் திட்டத்தில் வடுவூர் மேல்நிலைப்பள்ளி
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவிளையாட்டு

மத்திய அரசின் கேலோ இந்தியா விளையாட்டுத் திட்டத்தில் வடுவூர் மேல்நிலைப்பள்ளி

வடுவூருக்கு மேலும் ஒரு மணி மகுடம்.இளம் வீரர்களை பட்டை தீட்ட பெரும் வாய்ப்பு.

விளையாட்டு வீரர்கள் நிறைந்த வடுவூரில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் (SAI) மயிலாடுதுறை கபடி விடுதியின் விரிவாக்க மையமாக வடுவூர் மேல்நிலைப்பள்ளி 2017ம் ஆண்டு முதல் உள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள சாய் விரிவாக்க மையங்கள் 59 கேலோ இந்தியா விளையாட்டு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்படி, வடுவூர் மேல் நிலைப்பள்ளியில் உள்ள சாய் விரிவாக்க மையமும் கேலோ இந்தியா நேரடித் திட்டத்தின் கீழ் வருகிறது.

இத்திட்டத்திற்கு ஆண்டுதோறும் ₹ 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு,வடுவூர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும்  30 – 50 மாணவர்களுக்கு இலவச நவீன கபடி பயிற்சி, விளையாட்டு சீருடை, ஷூ உள்ளிட்டவை வழங்கப்படும்.இதற்காக பிரத்யேக பயிற்சியாளர் நியமிக்கப்படவுள்ளார். பயிற்சியாளர் நியமனத்திற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

மண் தரையில் ஆடப்பட்டு வந்த கபடி இன்றைக்கு செயற்கை தளங்களில் விளையாடப்பட்டு உலகளாவிய ஈர்ப்பை பெற்றுள்ளது. கபடி ஆர்வமும் திறனும் உள்ள இளம் வீரர்களுக்கு இது அரிய வாய்ப்பு. இதைப் பயன்படுத்தி பலன் பெறுவோம். விளையாட்டு வீரர்களை மெருகேற்றுவோம். சுடர் விளக்குகளை தூண்டி விடுவோம்.

-முகநூல் பதிவு

Leave a Reply