Home>>இலக்கியம்>>“வெட்டிக்காடு” நூல் வாசிப்பு அனுபவம்.
இலக்கியம்தமிழ்நாடுநூல்கள்மன்னார்குடி

“வெட்டிக்காடு” நூல் வாசிப்பு அனுபவம்.

நீண்ட நாளுக்கு பிறகு ஒருமூச்சில் படித்த புத்தகம் அண்ணன் ரவிச்சந்திரன் சோமு அவர்கள் எழுதிய #வெட்டிக்காடு என்ற புத்தகம்.

நினைவுகளின் நிஜங்களை எழுத்தில் முழுயாக கொடுத்துள்ளார். நம் ஆழ்மனதில் படிந்துக்கிடக்கும் பழைய நினைகளை கண்டிப்பாக தூசித்தட்டி திரும்பிப்பார்க்க வைத்துவிடும்.

சிறுவயதில் படித்த அரசு பள்ளி, பள்ளி ஆசிரியர்கள், வீட்டில் உள்ள ஆடு மாடு, உழவு நிலம், விளையும் தாணியம், களத்துமேடு இரவு காவல், பேய் பயம், நாவப்பழம் பறிப்பது, அப்போதைய பால்ய நண்பர்கள், பொங்கல் பெருவிழாக்கள், ஊர் நாட்டமை, மைனர் கணக்கா ஊர் சுற்றும் சண்டியர்கள், குலதெய்வம், வீட்டு காளைகள் வண்டிமாடுகள் மாட்டு வண்டி பயண நினைவுகள், கூட்டுக்குடும்பம், ஊர் பாசம், அம்மா பெரியம்மா பெரியப்பபா, இறுதியாக அப்பா ஒப்பீட முடியாத ஒருபந்தம். என பல நினைவுகள் மனசில் தட்டு எழுப்பிவிட்டார்.

நானும் மன்னார்குடி காரன் என்பதால் இன்னும் நினைவலையில் நீந்தி லாயித்துக் கிடக்கலானேன்.

அருமையான எதார்த்தம் மிகுந்த எழுத்துநடை சிறப்பானா கதை சொல்லும் திறன் கண்டிப்பாக தொடந்து எழுதவேண்டும் அண்ணன். பல நாடுகள் சுற்றுவருபவர் தாங்கள் பல அனுபவங்கள் இருக்கும் அதில் சுவாரசியம் மிகுந்த எத்தனையோ விடயங்கள் இருக்கலாம் அவைகளையும் எதிர்பார்கிறேன்.
நன்றி அண்ணன்.


பேரன்புடன்,
மனோ குணசேகன்,
புள்ளவராயன்குடிக்காடு, மன்னார்குடி.
08/12/2020.

Leave a Reply