Home>>இந்தியா>>பாரம்பரிய நெல் திருவிழா – 2020
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

பாரம்பரிய நெல் திருவிழா – 2020

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு, மறைந்த பாரம்பரிய நெல் மீட்பாளர் ஐயா நெல் ஜெயராமன் அவர்களால் நடத்தப்பட்டு வந்த நெல் திருவிழா, இவ்வாண்டும் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளியுடன் நடைபெற உள்ளது.

இவ்விழாவில் கருத்தரங்கம், நெல் கண்காட்சி நடைபெற உள்ளது. அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பித்து பயன்பெற ஒருங்கிணைப்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.

07.08.2020 (வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணிக்கு திருத்துறைப்பூண்டியில் உள்ள “நெல் ஜெயராமன் வேளாண் பண்ணை” ஆதிரெங்கத்தில் நடைபெறும்.

இதில் நெல் ஜெயராமன் ஐயா அவர்கள் மீட்டெடுத்த பாரம்பரிய நெற்கள் முதல் 100க்கும் மேற்பட்ட நெல் வகைகளை பார்வைக்கு வைக்க உள்ளார்கள்.

Leave a Reply