திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சிக்கு உட்பட்ட வ.உ.சி. சாலையில் உள்ள பின்லே பள்ளி தன்னுடைய மைதானத்தை பொதுமக்கள் நடைப்பயிற்சிக்கும், சிறுவர்கள் முதல் இளையோர்கள் வரை விளையாடவும் திறந்த வெளியில் விட்டால் அதை இரவு நேரங்களில் தவறாக மது அருந்த சிலர் பயன்படுத்துகிறார்கள்.
அது மட்டுமின்றி அங்கு அவர்கள் பயன்படுத்திய மதுபாட்டில்களையும், உணவு சாப்பிட்ட பின் அதன் நெகிழி பைகளையும் மைதானத்தில் போட்டுவிட்டு செல்கிறார்கள்.
இதனால் நடைபயிற்சி செய்யும் பெரியவர்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கும் பெரும் இடையுறாக உள்ளது.
இதனை மன்னார்குடி நகராட்சி கவனத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
கிஷோர், மன்னார்குடி.