Home>>உலகம்>>அமெரிக்கா>>“மேதகு” திரைப்படம் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பேராதரவை பெற்றுள்ளது.
அமெரிக்காஉலகம்செய்திகள்தமிழ்நாடுதிரைத்துறை

“மேதகு” திரைப்படம் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பேராதரவை பெற்றுள்ளது.

பலத்த எதிர்பார்ப்புகளுடன் சமீபத்தில் OTT தளத்தில் வெளியான “மேதகு” திரைப்படம் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பேராதரவை பெற்றுள்ளது. தமிழீழ தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால போராட்டங்களை ஆவணப்படுத்தும் முயற்சியில், இயக்குனர் கிட்டு் அவர்களின் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் பிரான்ஸ் மற்றும் டென்மார்க் நாடுகளில் திரையரங்குகளில் வெளியாகி சிறப்பான ஆதரவை பெற்றுள்ளது.

இதன் தொடர்ச்சியாக அமெரிக்க வாழ் தமிழ் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்க ஒன்றியத்தில் உள்ள அட்லாண்டா மாநகரில் அட்லாண்டா தமிழர் பேரவை என்ற தமிழ் அமைப்பின் ஏற்பாட்டில் திரையரங்குகளில் சிறப்பு காட்சியாக திரையிடப்படுகிறது.

தமிழர்கள் மட்டுமில்லாமல், அனைத்து மக்களும் கண்டிப்பாக காணும் வண்ணம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் கனக்டிகட் மாகாண தமிழர்களின் முன்னெடுப்பில் காட்போர்ட் நகரிலும் திரையரங்கில் திரையிடப்பட உள்ளது.

இந்திய ஒன்றியத்தில் திரையரங்குகளில் திரையிட இயலாத சூழலில் உலகெங்கும் திரையிடப்பட்டு பெருவாரியான மக்களை இத்திரைப்படம் சென்றடைவது உலகெங்கிலும் உள்ள தமிழ் உணர்வாளர்களால் பெரிதும் கொண்டாடப்படுகிறது.


கோபிநாதன்,
அமெரிக்கா

Leave a Reply