நீலகிரி மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், கேரளா மூணாறு பகுதி பெட்டி மூடியில் உள்ள கண்ணன் தேவன் தேயிலை தோட்ட பகுதிகளில் மழையின் காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
தேயிலை தோட்ட பணியாளர்களின் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 20 வீடுகள் முழுமையாக சேதம் அடைந்ததாக தகவல் தெரிவிக்கின்றன மேலும் நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களில் 9 பேர் தமிழர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.
இதனால் மழையின் தீவிரத்தை உணர்ந்த அரசு கேரளாவின் பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, வயநாடு உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுத்துள்ளது.