Home>>அரசியல்>>ஆங்கில நஞ்சு முறிக்கும் நாளெதுவோ?
அரசியல்கல்விசெய்திகள்

ஆங்கில நஞ்சு முறிக்கும் நாளெதுவோ?

திருச்செங்கோட்டைச் சேர்ந்த சோபியா சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் உணர்வு நீக்கியல் (anesthesia) படிப்பில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அவர் முந்தைய தினம்(10.08.2021) தற்கொலை செய்து கொண்டார். அவர் தமது தற்கொலைக்கான காரணத்தைக் கடிதமாக எழுதி வைத்திருந்தார். அவரால் பாடங்களை ஆங்கிலத்தில் படித்துப் புரிந்து கொள்ள முடியவில்லை என எழுதியிருந்தார். மேலும், கூட படிக்கும் தோழிகளுடன் சரிவர ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என்றும், இதனால் அவர் தனிமையில் வாடியதாகவும் எழுதியுள்ளார். எனவே அவர் தற்கொலை செய்யும் கொடுமையான முடிவை எடுத்ததாகக் கூறியுள்ளார்.

ஆங்கில_நஞ்சுக்குப் பலியாகும் முதல் மாணவர் அல்ல சோஃபியா.
சென்னை அடையாறில் செவிலியர் கல்லூரியில் படித்து வந்தவர் அறிவுச்சுடர். அவர் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்தவர். அவரது தந்தை தீராத தமிழ்ப் பற்றின் காரணமாக மகளுக்கு அறிவுச் சுடர் எனப் பெயர் சூட்டினார். ஆங்கிலம் தெரியாததால் பாடங்களைச் சரிவர படித்துப் புரிந்து கொள்ள முடியவில்லை என கூட படிக்கும் தோழிகளிடம் புலம்பி வந்த அறிவுச் சுடர் 2007 ஆகத்து 18ஆம் நாள் தற்கொலை செய்து கொண்டார்.

திருவாரூர் மாவட்டம்  நன்னிலம் பகுதியைச் சேர்ந்த மது பாஷினி செவிலியர் பட்டப் படிப்பு படித்து வந்தார். அவர் ஆங்கிலத்தில் பாடங்களைச் சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை என்ற காரணத்தால் 2021 சூலை 8ஆம் நாள் தற்கொலை செய்து கொண்டார்.

ஆங்கிலம் அறிவு கொளுத்தும் சுடர் அல்ல. அது அறிவுச் சுடர்களை அழிக்கும் நஞ்சு.
இந்த ஆங்கிலப் பார்த்தினியத்தை, சரியாகச் சொன்னால்
ஆங்கிலப் பார்ப்பனியத்தைத் தமிழ்நாட்டில் ஊன்றி வளர்த்தோர் யார்? யார்?
பெரியார் உள்ளிட்ட திராவிடத்_தலைவர்கள்தான். ஏனென்றால் அவர்களுக்கென்று தெளிவான சமூகநீதி கல்விக் கொள்கையோ, மொழிக் கொள்கையோ
இன்று_வரை கிடையாது.

ஆங்கிலத்துக்கு பலியான சோபியா, அறிவுச் சுடர், மது பாஷினி ஆகியோரின் தற்கொலைகள் வெறும் விபத்து அன்று.
தவறான_மொழிக்_கொள்கையின் விளைவிது.
ஆங்கிலம் சிலரைக் கொலை செய்கிறது, பெரும்பான்மைத் தமிழர்களை உடல்வகையிலும், மனவகையிலும் வாடி வதைத்து வருகிறது, அவர்களைக் கொல்லாமல் கொன்று வருகிறது.

இனி, நம் மாணவர்களை ஆங்கில பலியிலிருந்து காப்பாற்ற வேண்டுமானால், தமிழ்த் தேசத்தில் பெரும் தமிழ்வழிக் கல்விப் புரட்சி நடைபெற்றாக வேண்டும்.
எனவேதான் நான் சில நாட்களுக்கு முன்பு எழுதினேன், ஒரு தேசத்தில்
ஒரு மொழியின் மீதான அயல்மொழித் திணிப்பு என்பது, வெறும் திணிப்பு அல்ல,
ஓர் இனக்கொலை (genocide). சரியாகச் சொன்னால்
மொழியியல்_இனக்கொலை (linguistic genocide).
ஆங்கில நஞ்சு முறிக்கும் நாளே தமிழர்களின்
உண்மையான விடுதலை.

Source: Facebook எழுத்தாளர்  நலங்கிள்ளி

செய்தி சேகரிப்பு:
இரா.செந்தில்குமரன்,
மன்னார்குடி

Leave a Reply