Home>>அரசியல்>>ஏரி வேலை எனப்படும் 100 நாள் வேலைத்திட்டமும் விவசாயத்தின் அழிவும்
அரசியல்செய்திகள்

ஏரி வேலை எனப்படும் 100 நாள் வேலைத்திட்டமும் விவசாயத்தின் அழிவும்

ஒரு மாதம் வேலை, ஒரு வாரம் விடுப்பு.
ஏரிகளை தூர்வாருதல், சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்துவது, கண்மாய்களை சுத்தம் செய்தல், புதிய குளம் குட்டைகளை உருவாக்குதல்

போன்ற வேலைகளை செய்வதற்கு, தலைக்கு 1000 ரூபாய் என்ற முறையில் JCB இயந்திரங்களை வாடகைக்கு எடுத்து ஒரே நாளில் அறைகுறையாக வேலையை முடித்துவிட்டு மாதம் முழுவதும் மரத்தடியில் கூடி கும்மாளம் அடிப்பதற்காக அரசாங்கம் காசு கொடுத்து செய்வது தான் இந்த 100 நாள் வேலைத்திட்டம்.

ஏரிவேலைக்கு போகனும் தம்பி, நாத்து நடறதுக்கு, களை எடுப்பதற்கு, கதிர் அறுப்பதற்கு எல்லாம் வரமுடியாது பா என்று அரம்பித்து இன்றைய சூழலில் விவசாய வேலைகளில் இருந்து மக்கள் முற்றிலுமாக விலகியிருப்பது, விவசாயத்தின் சாபக்கேடு.

தெனமும் சும்மா உக்காந்துட்டு வறோம் அதுக்கே 200 ரூபா வருது, நாங்க எதுக்கு கூலி வேலைக்கு போகனும் என்று சொல்லும் போது, விவசாயம் செய்பவர்களுக்கு விவசாயத்தையே விட்டுட்டு வேற வேலைக்கு போயிடலாம் என்று முடிகிறது, இந்த விவசாயத்தின் இறுதிச்சடங்கு.

இதில் பெரிதும் பாதிக்கப்படுவது சிறு குறு விவசாயிகள் தான்.

இந்த அவலத்தில், இப்போது 100லிருந்து 150 நாட்களாக உயர்த்தி புரட்சி செய்து இருக்கிறது திமுக அரசு.

ஒரே தீர்வு:
விவசாய வேலைகளுக்கு ஆட்களை வேண்டுவோர், அந்தந்த ஊராட்சி அலுவலர்கள் மூலம், 100 நாள் வேலைத்திட்டத்தில் அரசே வேலை வழங்க வழிவகை செய்ய வேண்டும்.
விவசாயியும் வாழ்வான், மக்களுக்கும் வேலை இருக்கும்.

source: https://m.facebook.com/story.php?story_fbid=239105658076643&id=100059316300347

 

செய்தி சேகரிப்பு:
இரா.செந்தில்குமரன்,
மன்னார்குடி

 

Leave a Reply