Home>>அரசியல்>>தியாகி வே.இமானுவேல் சேகரனாரின் 64வது நினைவு தினம்
வே. இம்மானுவேல் சேகரனார்
அரசியல்செய்திகள்தமிழ்நாடுவரலாறு

தியாகி வே.இமானுவேல் சேகரனாரின் 64வது நினைவு தினம்

இன்று (செப். 11) தியாகி வே.இமானுவேல் சேகரனாரின் 64வது நினைவு தினத்தை முன்னிட்டு திருத்துறைப்பூண்டியில் உள்ள அவரது திரு உருவச்சிலைக்கு காலை 8:30 மணியளவில் மரியாதை செய்தேன்.

சங்கபரிவார அமைப்புகள் சிவில் சமூகத்தை கைபற்றியதோடு ஆட்சி அதிகாரத்தையும் கைபற்றி உள்ள இந்த நேரத்தில், மொழிவழி தேசிய இனங்களின் நிலங்கள் உழைக்கும் மக்களிடமிருந்து பறிக்கபட்டு பெரும் முதலாளிகளிடம் சென்று கொண்டு இருக்கும் இந்த நேரத்தில், சாதிய ஏற்றத்தாழ்வுகள் கடந்த காலங்களை விட கொஞ்சம் பரவா இல்லை என்று தோன்றினாலும் கூட சாதிய ஏற்றத்தாழ்வுக்கள் அவ்வெப்போது நவீன வடிங்களை பெற்று உயிர் பெற்று விடுகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.

இந்த நேரத்தில் சாதிய பிரச்சினைகளை மேலோட்டமாக அல்லாமல் நுட்பமாக அணுகி சாதி கடந்து பாட்டாளி மக்களை ஓரணியில் திரள வேண்டியது காலத்தின் தேவை என்பதை உணர வேண்டும், அரவணைத்து அடிமடியில் கை வைத்து அழிக்கும் இந்துத்துவ சங்கபரிவார கும்பலின் சூழ்ச்சிக்கு எந்த ஒரு சமூகத்தையும் பலிகடாய் ஆக்கவிடாமல் பாதுகாப்பது முற்போக்கு சக்திகளின் மிக பெரிய கடமையாக உள்ளது என்பதை மறுக்க முடியாது.

குறிப்பாக தமிழகத்தில் சங்கபரிவார கும்பல்களின் ஆதிக்கத்தை கட்டுபடுத்த, பாஜகவை பலம் பெறுவதை தடுக்க வேண்டும் என நினைத்தால் பல்வேறு சமூகங்களில் உள்ள ஜனநாயக சக்திகளை வென்றடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து முற்போக்கு அமைப்புகள் செயல்பட வேண்டும்.

வெறுமனே சாதி ஓழிக என்று பேசுவதாலோ! கோபேக் மோடி என்று hashtag போடுவதோடு முற்போக்காளர்களின் கடமை முடியவில்லை, மதவாத சக்திகள் அரசிலதிகாரமற்ற அரசியலதிகாரத்திற்கு ஏங்குகிற பெரும்பான்மை சமூகங்களை குறிவைத்து செயல்படுவது வெளிப்படையாக தெரிய வருகிறது. இதை உணர்ந்து அந்தெந்த சமூகங்களின் நியாயமான உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும், அவர்களுக்காக குரல் கொடுப்பது, நியாயமான நிலைபாடுகளில் உடன் நிற்பது, பாதிக்கபட்டால் நீதி பெற்று தருவது என்று செயல்பட்டால் நிச்சயம் அந்தந்த சமூகங்களில் இருந்து ஜனநாயக சக்திகளை வென்றெடுத்து அவர்களை இந்துத்துவ சங்கப்பரிவார முகாமிற்கு செல்ல விடாமல் தடுத்து மதவாத சக்திகளை பலவீனப்படுத்த முடியும்.

உதாரணமாக பள்ளர் என்னும் தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கு எதிராக களத்தில் நின்று சண்டை செய்யும் சமூகங்களில் ஒன்றாகும். மேலும் இச்சமூகம் பெரும்பான்மை தமிழ் சமூகங்களுள் ஒன்று என்பதை அனைவரும் அறிவர். ஆதிக்க சாதியினர் மற்றும் மிட்டா மிராசுகளை மட்டுமல்லால் காவல்துறையினரின் அடக்குமுறைகள் துப்பாக்கிச்சூடுகள் உள்ளிட்ட அரச பயங்கரவாத செயல்பாடுகளை எதிர் கொண்டு வருபவர்கள், வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்து பேருந்து இயங்காவிட்டால் தமிழகத்தில் எந்த தலைவரின் பெயரிலும் பேருந்துகள் இயங்கவிட மாட்டோம், அதோடு தலைவர்கள் பெயரில் உள்ள மாவட்டங்களும் இருக்கவிட மாட்டோம் என பல மாதங்கள் களத்தில் நின்று திருப்பி அடித்து அன்றைய அரசாங்கத்தை அனைத்து போக்குவரத்து கழகங்கள் பெயர்களையும் தலைவர்களின் பெயரில் இயங்கிய மாவட்டங்களின் பெயர்களையும் மாற்றி எழுத வைத்ததை தமிழகம் மறந்திருக்காது.

இந்தகைய சமூகத்தினரை பிஜேபி முகாமுக்கு செல்வதை தடுத்து அந்த சமூகத்தில் உள்ள ஜனநாயக சக்திகளை வென்றெடுத்து சங்கபரிவார ஆதிக்கத்தை தடுத்திட முற்போக்கு சக்திகள் களமாட வேண்டும். மாறாக அவர்கள் குரலை செவிகொடுத்து கூட கேட்காமல் எதிர் முகாமுக்கு தள்ளிவிடக் கூடிய சூழ்நிலைகள் மாற வேண்டும்.

தும்பை விட்டுவிட்டு வாலை பிடிப்பதால் பலன் இல்லை.


தோழமையுடன்
கா.லெனின்பாபு
11/09/2021

Leave a Reply