“தமிழ்நாட்டுக்கு தன்னாட்சி வேண்டும்.
இந்தியா ஒரு கூட்டாட்சியாக மலரவேண்டும்.
United States Indiaவாக இருக்க வேண்டும்.”
இந்த மூன்று அதிகாரங்களைத் தவிர அனைத்து அதிகாரங்களும் அந்தந்த மாநிலங்களுக்கு வேண்டும் என்று முதன் முதலில் குரல் கொடுத்தவர் சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் அவர்களே.
1940களின் இறுதியில் இது குறித்து விரிவான நூல் ஒன்று எழுதி உள்ளார். அந்நூலில் தன்னாட்சியின் முக்கியத்துவம் பற்றியும், கூட்டாட்சி பற்றிய கோட்பாடு குறித்தும் விளக்கமாக எழுதி இருப்பார்.
அப்பொழுதெல்லாம் தன்னாட்சி கோரிக்கையை மறுத்து “திராவிடநாடு” கோரிக்கையை கேட்டவர்கள்தான்
திராவிட முன்னேற்றக் கழகத்தினர். அப்போது “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற கோரிக்கையை திராவிடர் கழகம் எழுப்பியது. திராவிடர் கழகமோ, திமுகவோ 1962க்கு முன் எந்த காலத்திலும் தன்னாட்சியை ஒரு கோரிக்கையாக, அரசியல் கோட்பாடாக முன்வைத்ததே கிடையாது.
இன்று திராவிடத்தின் பெயரால் தன்னாட்சி கோரிக்கையை முன்னிலைப்படுத்துகிறார்கள். 1962இல் பிரிவினைவாத தடைச்சட்டம் வந்தபொழுது திராவிட நாடு கோரிக்கையை அண்ணா கைவிடுகிறார்.
அப்பொழுது அண்ணா அரசியலில் ஒரு புதிய நிலைப்பாட்டை எடுக்கிறார். அதுதான் மாநில சுயாட்சி. தன்னாட்சி என்பதன் மறுவடிவமாக அந்த மாநில சுயாட்சி முழக்கத்தை முன் வைக்கிறார். அந்த முழக்கத்தை
முன் வைக்கும்போது கூட பெருந்தகையாளர் அண்ணா அவர்கள் இந்த கோரிக்கையை நான் ம.பொ.சியிடம் இருந்து பெற்றுக் கொள்கிறேன் என்று கூறினார்.
இந்த கொள்கை ம.பொ.சியின் கொள்கையே என்று அண்ணாவே கூறியுள்ளார். இந்த அடிப்படை நேர்மை கூட இல்லாமல், இன்று இந்தக் கோரிக்கையை அண்ணாவின் கோரிக்கையாக மடை மாற்றுவது அரசியல் பித்தலாட்டம் ஆகும்.
உண்மையில் “தன்னாட்சி தமிழகத்தின் தந்தை ம.பொ.சி அவர்களே”.
வரலாற்றை திரித்து, அண்ணாவை முன்னிலைப்படுத்துவதன் உள்நோக்கம் நமக்கு புரியாமல் இல்லை. ஆனால் வரலாறை வரலாறாக வாசிக்க வேண்டும்.
அண்ணா கேட்டது திராவிட நாடு. ம.பொ.சி கேட்டது தன்னாட்சி தமிழகம் மட்டுமல்ல, United States of India என்ற அரசியல் முழக்கத்தை முன்வைத்ததும் ம.பொ.சி. அவர்களே!
1940களில் இருந்து தன்னாட்சி கோரிக்கைக்காக போராடியவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களே! வரலாற்றை உங்கள் வசதிக்காக திரிக்காதீர்கள்!
—
கட்டுரை:
திரு. மருது பாண்டியன்,
சோசலிச மையம்
+91 7550256060
—
செய்தி சேகரிப்பு:
திரு. கலைச்செல்வன்,
திருவாரூர்.