Home>>உலகம்>>அமெரிக்கா>>கோத்தபாய இராஜபக்சவுக்கு எதிராக திரண்ட அமெரிக்க வாழ் தமிழர்கள்
அமெரிக்காஈழம்உலகம்சிறிலங்காசெய்திகள்

கோத்தபாய இராஜபக்சவுக்கு எதிராக திரண்ட அமெரிக்க வாழ் தமிழர்கள்

ஐ.நா பொதுச்சபையில் உரையாற்ற சென்றுள்ள இலங்கை அதிபர் கோத்தபாய இராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க வாழ் தமிழர்கள் நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செப்டம்பர் 22 ஆம் நாள், நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா பொது மன்றத்தின் முன் திரண்ட தமிழர்கள் இனப்படுகொலைக்கு நீதி வேண்டியும், கோத்தபாய ராஜபக்சே வரவை கண்டித்தும், #GoBackGotha என்ற பதாதைகளுடன் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் பெருவாரியான மக்களின் கவனத்தை ஈர்த்தது.

ஆர்ப்பாட்டத்தில் எடுக்கப்பட்ட படங்களை கீழே பகிர்ந்துள்ளோம்.


செய்தி உதவி:
கோபிநாதன்,
மன்னார்குடி.

Leave a Reply