Home>>சமூக பணி>>மன்னார்குடியில் நாட்டு நலப்பணி திட்ட தினத்தினை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் பணி
சமூக பணிசுற்றுசூழல்தமிழ்நாடு

மன்னார்குடியில் நாட்டு நலப்பணி திட்ட தினத்தினை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் பணி

மன்னார்குடி பான்செக்கர்ஸ் கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட தினம் இன்று கொண்டாடப்பட்டது.

ஆண்டுதோறும் செப்டம்பர் 24 ஆம் தேதி நாட்டு நலப்பணித்திட்டம் தொடங்கப்பட்ட நாளை நாடு முழுவதும் நாட்டு நலப்பணித்திட்ட தினமாக கொண்டாடி வருகிறோம்.

அதனை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருட்சகோதரி டாக்டர் விக்டோரியா தலைமை வகித்தார்.

திருவாரூர் மாவட்ட நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் என். இராஜப்பா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்து NSS அமைப்பின் நோக்கம் செயல்பாடுகள் குறித்து பேசினார். தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் 200 மரக்கன்றுகளை மாணவிகள் நடும் பணியில் ஈடுபட்டனர்.

கல்லூரியின் தலைமை அன்னை மற்றும் பேராசிரியர்கள் டாக்டர் சண்முகம் அறவாழி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


செய்தி உதவி:
ஆசிரியர் இராஜப்பா,
மன்னார்குடி.

Leave a Reply