ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்தா கிசான் மோர்ச்சா)
செய்தி வெளியீடு
314வது நாள், 06 அக்டோபர் 2021.
* ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும், அஜய் மிஸ்ராவை ஒன்றிய அமைச்சரவையிலிருந்து நீக்குதல் வேண்டும், மற்றும் அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் ஆகியகோரிக்கைகள் நிலுவையில் உள்ளன – இவை நிறைவேற்றப்படாவிட்டால், தியாகிகளின் இறுதி பிரார்த்தனை நாள் அன்று, உ.பி. மற்றும் ஒன்றிய அரசுகளுக்கு எதிராக ஒரு பெரிய போராட்ட திட்டம் அறிவிக்கப்படும் – எஸ்.கே.எம். இறுதி எச்சரிக்கை விடுக்கிறது!
* ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் தனது பதவியில் வெட்கமில்லாமல் தொடர்கிறார் – அவரது மகனும் உ.பி. காவல்துறையினரால் கைது செய்யப்படவில்லை – சாதாரண குடிமக்களுக்கு எதிரான கொலை நோக்கம் கொண்ட குற்றவாளிகள் அரசாங்கத்திலிருந்து அகற்றப்படவேண்டிய நேரம் இது என்று எஸ்.கே.எம். கூறுகிறது – லக்கிம்பூர் கேரி உழவர்கள் படுகொலையில் நீதிக்கான போராட்டத்திலிருந்து பின்வாங்காது என்று எஸ்.கே.எம். அறிவிக்கிறது.
* தியாகிகளான நான்கு விவசாயிகளின் உடல்களும், உள்ளூர் பத்திரிகையாளரின் உடலும் தகனம் செய்யப்பட்டன!
* பருத்தி விவசாயிகளின் பயிர் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கவும், அனைத்து மாநிலங்களிலும் நெல் உழவர்களிடமிருந்து உடனடியாக கொள்முதல் செய்யவும் எஸ்.கே.எம். கோருகிறது!
மோடி அரசாங்கத்தில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டேனி, அவரது குற்ற பின்னணி உள்ள கடந்த காலம் இப்போது பெரிய அளவில் பொதுமக்களுக்கு தெரிய வந்துள்ளது, வெட்கமில்லாமல் ஒரு அமைச்சராக தொடர்கிறார். அரசாங்கத்திலிருந்து அவரை நீக்குவது நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது என்று எஸ்.கே.எம். கூறுகிறது. ஒரு அமைச்சருக்கு, அதுவும் உள்துறைக்கு, இதுபோன்ற குற்ற பின்னணி, கொலைகார தன்மை மற்றும் வரலாறு இருப்பது வெட்கக்கேடானது. மேலும் ஒரு பொதுக் கூட்டத்தில் உழவர்களுக்கு வெளிப்படையாக அச்சுறுத்தல் விடுத்தபோதே எஸ்.கே.எம் எச்சரித்தது. என்றபோதும் மோடி அரசு அவருக்கு அடைக்கலம் கொடுத்தது. சில வாரங்களுக்கு முன்பு செப்டம்பர் 25 அன்று. அஜய் மிஸ்ரா மற்றும் ஆஷிஷ் மிஸ்ரா இருவரும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும், அமைச்சர் உண்மையில் ஜாமீனில் வெளிவந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன. அமைச்சருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது கடுமையான எதிர்ப்பை சந்திக்க வேண்டும் என்று மோடி அரசுக்கு எஸ்.கே.எம். எச்சரிகை விடுத்துள்ளது. திரு.நரேந்திர மோடி உத்தரபிரதேசத்திற்கு நேற்று சென்றிருந்த போதிலும், லக்கிம்பூர் உழவர்கள் படுகொலை நிகழ்வுகள் குறித்து மௌனமாக இருப்பதை எஸ்.கே.எம். கண்டித்துள்ளது.
இதற்கிடையில், அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை உ.பி. காவல்துறையினர் இன்னும் கைது செய்யவில்லை.
விவசாயத் தலைவர் தஜீந்தர் சிங் விர்க் மீது லக்கிம்பூர் கேரியில், அவர் தாக்கப்பட்டு காயமடைந்த போது, அவர் மீது வழக்கு பதிவு செய்ததை எஸ்.கே.எம். கண்டிக்கிறது. தஜீந்தர் விர்க் அமைதியாக சாலையில் நடந்து சென்றபோது பின்னால் இருந்து “தார்” வாகனத்தால் தாக்கப்பட்டதாகவும், பின்னர் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்ததால், மற்றவர்கள் அவருக்கு உதவ ஓடிக் கொண்டிருந்ததாகவும் களத்திலிருந்து வீடியோ பதிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருப்பது கொடுமையான கேலிக்கூத்து என்றும் அதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் எஸ்.கே.எம். கூறியுள்ளது.
ஆஷிஷ் மிஸ்ராவின் குழுவினர் மூலம் இடித்து கீழே தள்ளப்பட்ட ஊடகவியலாளர் ராமன் காஷ்யப்பை காப்பாற்ற உத்தரபிரதேச காவல்துறை அதிகாரிகள் புறக்கணித்துள்ளதாக எழுந்த புகாரின் மீது முழுமையான விசாரணை நடத்த எஸ்.கே.எம். கோரியுள்ளது. அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காமல் நேராக பிணவறைக்குக் கொண்டு சென்றதால், ராமன் காஷ்யப்பின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. ராமன் காஷ்யப்பின் தகனம் இன்று நடந்தது. இறந்த பத்திரிகையாளரின் தந்தை அளித்த புகார் இன்னும் உ.பி. காவல்துறையால் எஃப்ஐஆராக பதிவு செய்யப்படவில்லை. இந்த வழக்கை பதிவு செய்யுமாறு எஸ்.கே.எம். கோருகிறது.
லக்கிம்பூர் கெரி படுகொலையில் வீரமரணம் அடைந்த நான்கு உழவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன. பஹ்ரைச்சில் இரண்டாவது மருத்துவ குழுவினரால் இரண்டாவது பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு, குர்விந்தர் சிங்கின் இறுதி தகனம் செய்யப்பட்டது. அறிக்கை இன்னும் வர வேண்டியுள்ளது.
லகிம்பூர் கேரி உழவர்கள் படுகொலை வழக்கிலும், அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கும் எதிராக போராட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று சம்யுக்த் கிசான் மோர்ச்சா மீண்டும் வலியுறுத்துகிறது. அரசியலமைப்பு பதவியில் இருக்கும் ஒரு மாநில அரசாங்கத்தின் முதலமைச்சர், வெளிப்படையாக வன்முறையைத் தூண்டுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. கட்டார் ராஜினாமா செய்யும் வரை அல்லது அகற்றப்படும் வரை நாங்கள் ஓய்வெடுக்க மாட்டோம் என்று எஸ்.கே.எம். கூறியுள்ளது. இந்த விடயத்தில் விரைவில் ஒரு போராட்டத் திட்டத்தை அறிவிக்க இருப்பதாகவும் எஸ்.கே.எம். கூறியுள்ளது.
இன்று அரியானா பிவானியில், ஒரு கல்லூரிக்கு அரியானா மாநில வேளாண் அமைச்சர் ஜே.பி.தலால் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வருவதையொட்டி, கல்லூரிக்கு வெளியே நூற்றுக்கணக்கான உழவர்கள் கூடி, அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தானில், நெல் கொள்முதல் மற்றும் பாசன நீருக்காக போராடும் ஸ்ரீகங்காநகர் மற்றும் ஹனுமன்கர் உழவர்கள், தங்கள் கோரிக்கைகளைத் தீர்ப்பதில் கெலாட் அரசாங்கத்தின் அக்கறையின்மையைச் சுட்டிக்காட்டுகின்றனர். உழவர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உழவர்கள் கோருகின்றனர்.
கர்நாடகத்தில், கரும்பு உழவர்கள் பல நாட்களுக்கு முன்பு சட்டசபை முற்றுகை அறிவித்திருந்த நிலையில், நேற்று பெங்களூரில் ஒரு பெரிய பேரணி மற்றும் தர்ணாவை நடத்தினர். கரும்புக்குச் சட்டபூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட விலையை குறைந்தபட்சம் குவிண்டாலுக்கு ரூ.350 ஆக நிர்ணயிக்க வேண்டும் என்று அங்குள்ள உழவர்கள் கோருகின்றனர். கர்நாடக முதல்வர் உழவர்களுக்கு ஒரு வாரத்திற்குள், இந்த விடயத்தைப் பரிசீலித்து விலைகளை மறுபரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார்; இந்த உத்தரவாதத்திற்கு பிறகு, உழவர்கள் இப்போதைக்கு தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இன்று, கிசான் மகாபஞ்சாயத்துகள் உத்தரகாண்டின் உதாம்சிங் நகரின் ஜஸ்பூர் மண்டி மற்றும் அரியானாவின் சிர்சாவில் உள்ள கலன்வாலியில் ஏற்பாடு செய்யப்பட்டன.
லக்கிம்பூர் கேரி படுகொலை குறித்து வலுவான எதிர்வினை பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களிடமிருந்து மட்டுமல்லாமல், (தமிழ்நாடு, ராஜஸ்தான், கேரளா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், டெல்லி, பஞ்சாப், ஜார்கண்ட் போன்றவை) மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளிடமிருந்தும், அதிலும் முக்கியமாக பிரிட்டன் மற்றும் கனடாவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் வெளிப்பட்டுள்ளன. இவர்கள் பஞ்சாபை பூர்வீகமாகக் கொண்டு, மற்ற நாடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள். இவர்கள் இரங்கல் தெரிவித்ததோடு, இதற்கான நீதியும் விரைவில் கிடைக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
அறிக்கையை வழங்கியவர்கள்:
பல்பீர் சிங் ராஜேவால்,
டாக்டர் தர்ஷன் பால்,
குர்ணம் சிங் சாருனி,
ஹன்னன் மொல்லா,
ஜக்ஜித் சிங் டல்லேவால்,
ஜோகிந்தர் சிங் உக்ரஹான்
சிவகுமார் சர்மா ‘காக்காஜி’,
யுத்வீர் சிங்
யோகேந்திர யாதவ்.
ஐக்கிய விவசாயிகள் முன்னணி
(சம்யுக்தா கிசான் மோர்ச்சா)
வெளியீடு:
SKM – ஐக்கிய விவசாயிகள் முன்னணி,
தமிழ்நாடு