Home>>உலகம்>>சிங்கப்பூர் 55ஆம் ஆண்டு தேசிய நாள்
உலகம்செய்திகள்

சிங்கப்பூர் 55ஆம் ஆண்டு தேசிய நாள்

பல தேசிய இன மக்களை ஒருங்கிணைத்து ஒரு நாட்டை நிர்வகிப்பது என்பது மிக பெரிய சவாலான ஒன்று. அந்த வகையில் திறம்பட செயல்பட்டு, தங்களது நிர்வாக திறமையை முன்வைத்து பல நாடுகளுக்கு முன் மாதிரியாக திகழ்ந்து வருகிறது சிங்கப்பூர்.

சிங்கப்பூர் தனது 55ஆம் ஆண்டு தேசிய நாளை சிறப்பாக கொண்டாடியது. கொரோனா காலம் என்பதால், மக்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு கடந்த காலங்களில் ஏற்பாடு செய்தது போன்ற பல நிகழ்ச்சிகளை அரசால் இம்முறை ஒருங்கிணைக்க இயலாமல் போனது.

இருப்பினும் சிங்கப்பூர் மக்கள் சமூக ஊடகங்களில் தங்கள் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டார்கள்.

வான்வெளியில் விமானப்படை வீரர்கள் சிங்கப்பூர் நாட்டின் கொடியை, மக்கள் வீட்டில் இருந்தவாறே பார்க்கும் வண்ணம் பறக்க செய்தார்கள்.

சாலையில் ராணுவ தளவாடங்களை மக்களின் பார்வைக்கு கொண்டு வந்தார்கள். இதனை சாலையின் ஓரங்களில் நின்று மக்கள் தங்கள் கைகளில் இருந்த கொடிகளை அசைத்து ஆர்ப்பரித்தனர்.

மற்றும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இருந்தே பலரின் வீடுகளின் வெளியே தேசிய கொடியை பறக்க செய்து தங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த கொடிகள் மேலும் சில வாரங்கள் கூட அவர்கள் வீடுகளின் வெளியே தொடர்ந்து தொங்க விட செய்வார்கள்.

Leave a Reply