— பிரசன்னா, மன்னார்குடி
திருவாருர் மாவட்டம் மன்னார்குடியின் தவிர்க்க முடியாத அடையாளமாக இருந்து வருகிறது புகழ் பெற்ற கரித்திரா நதி தெப்பகுளம். இது நகரத்தின் மைய பகுதியிலேயே அமைத்துள்ளது.
இந்த தெப்பகுளக்கரைகளில் சமீபகாலமாக ஆங்காங்கே குப்பைகள் நிறைந்தும், சிலரின் அலட்சியத்தால் மதுபான குடுவைகளும் நிறைந்து காணபடுகின்றன.
பலரும் விழிப்புணர்வு இன்றி தொடர்ந்து குப்பைகளை கொட்டிக் கொண்டே இருப்பதால், அந்த பகுதி மக்கள் நீர்நிலையை காக்க கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்கள்…
1. மன்னார்குடி நகராட்சி இதை கவனத்தில் கொண்டு இவைகளை உடனடியாக தூய்மைப்படுத்த வேண்டும்.
2. தெப்பக்குளக்கரைகளின் நான்கு புறமும் போதுமான அளவிற்கு குப்பைத்தொட்டிகளை வைத்து பராமரிக்க வேண்டும்.
3. கண்காணிப்பு காணொலி கருவிகள் பொருத்தப்பட வேண்டும்.
4. சுற்றுசுவர்கள் மிக சிறிய அளவில் இருப்பதால் தெப்பக்குளத்தை சுற்றி உயரமான அளவிற்கு தடுப்பு வேலி வைக்க வேண்டும்.
5. மற்றும் போதுமான அளவு அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும்.
இறுதியாக தெப்பக்குளத்தின் ஓரத்திலேயே இவ்வளவு குப்பை கொட்டப்படுகிறது என்றால், தெப்பக்குளத்தின் உள்ளே எவ்வளவு குப்பைகள் கொட்டிக் கொண்டு இருப்பார்கள் என்ற கேள்வியும் அந்த பகுதி மக்களால் முன்வைக்கப்பட்டது.
அதன் படங்களை உங்கள் பார்வைக்கு கீழே கொடுத்துள்ளோம்.