Home>>செய்திகள்>>கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு இழப்பீட்டு தொகையை குறைத்தது தமிழக அரசு
தமிழ்நாடு சட்டமன்றம்
செய்திகள்தமிழ்நாடு

கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு இழப்பீட்டு தொகையை குறைத்தது தமிழக அரசு

— அருள்பாண்டியன், பூவனூர்,
மன்னார்குடி


கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு இன்னுயிரை இழக்கும் முன்களப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது தமிழக அரசு அந்த நிதியை ரூ.25 லட்சமாக குறைத்து அரசாணை வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

குறிப்பாக இந்த பேரிடர் காலத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களை காக்கும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் எதிர்பாராதவிதமாக தங்கள் உயிரை இழக்க நேரிட்டால் அவர்களுக்கு வழங்க வேண்டிய உரிய இழப்பீட்டை தமிழக அரசு கண்டிப்பாக வழங்க வேண்டும், அதற்கு இந்த அரசாணையில் தேவையான திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் குரல் எழுப்ப துவங்கியுள்ளார்கள்.

மற்றும் தமிழக அரசு முன்னர் சொன்னதை அரசாணையில் கொண்டு வரமுடியாமல் போனதற்கான காரணம் என்னவென்றும் கேள்விகள் சமூகத்தில் எழ துவங்கியுள்ளது.

Leave a Reply