கோவை தனியார் பள்ளியில் பயின்ற மேல்நிலைப் பள்ளி மாணவி தற்கொலை. இத்தற்கொலைக்குக் காரணமாக இருந்த பள்ளி ஆசிரியர் மிதுன் மற்றும் தலைமை ஆசிரியர் மேலும் மாணவி கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று மகளிர் ஆயம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த அப்பாவிச் சிறுமியைப் போன்று இனி எந்த மரணமும் நிகழ்ந்துவிடக்கூடாது. பெண்கள் பயிலும் கல்வி நிறுவனங்கள் அதற்கான உத்திரவாதத்தைத் தர வேண்டும். பெண் குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் கல்லூரிகளில் ஆற்றுப்படுத்தலுக்கான ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவேண்டும்.
பெண் குழந்தைகளுக்கு பாலியல் கல்வி ப் பாடங்களும் சட்டம் பாதுகாப்பு பாடங்களும் அவரவர் வயதுக்கேற்ப முறையாக வழங்கப்பட வேண்டும்.
பெற்றோர்கள் – குழந்தைகளின் உறவு பேராதரவு கொண்டதாக அமையவேண்டும்.குழந்தைகள் எவ்விதத் தயக்கமின்றி தங்கள் நல்ல ,கெட்ட அனுபவங்களைப் பெற்றோரிடம் பகிர் வேண்டும்.
பெண் குழந்தைகளுக்கான நட்பு வட்டம் நிகழ்வுகளின் தன்மை மை உணர்ந்து சரியான விதத்தில் தோள் கொடுக்க வேண்டும்.
மாணாக்கர்களிடையே உறவுகளிடையே சமூகத்தளத்தில் பெண் சார்ந்த அறச்சிந்தனைகள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
பொதுவான பெண்கள் நலம், பெண்கள் மாண்பு கருதி தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் இழுத்து மூடப்படவேண்டும்.
பாதிக்கப்பட்ட கோவை மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என மகளிர் ஆயம் மீண்டும் வலியுறுத்துகிறது.
—
அருணா,
தலைவர்,
மகளிர் ஆயம்,
தமிழ் நாடு.