தமிழ் இறையோன் முருக பெருமானுக்கு உகந்த திருக்கார்த்திகை மாதமான இம்மாதத்தில் அருளாளர் அருணகிரி நாதர் அருள செய்த “திருப்புகழ்” பெருமிதங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்காக “திருப்புகழ் விழா” இன்று 29-11-2021 காலை 9.30 மணிக்கு சிதம்பரம் அருகே பூங்குடியில்
தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் நடைப்பெற்றது.
தெய்வத்தமிழ்ப் பேரவை செயற்பாட்டாளர் ஓதுவார் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற
இவ்விழாவில் திரு கனகசபை அவர்கள் முன்னிலை வகித்தார்.
அருளாளர் அருணகிரி நாதர் அருளிய “திருப்புகழ்” திருப்பாக்களை செந்தமிழ் அந்தணர்கள், ஓதுவார்கள், அடியார்களால் பாடப்பெற்றது.
மேலும் திருப்புகழின் இசைத்தாளங்கள், சொல்வளம், கருத்தாழம் குறித்த சிறப்புகளை தெய்வத்தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர் வே.சுப்ரமணியசிவா விளக்கி பேசினார்.
இதில் தெய்வத்தமிழ்ப் பேரவை அன்பர்கள் திரு.கோதண்டபாணி, வடலூர் முத்துக்கிருஷ்ணன், திட்டுகாட்டூர் நடராஜன், மேலமூங்கிலடி திரு.சம்பந்தம், திரு.முருகேசன், பண்ணப்பட்டு உத்திராபதி, பூங்குடி ஊர் பெரியவர் முருகையன், ஊர் தலைவர்களில் ஒருவரான சு.உதயகுமார் மற்றும் மெய்யன்பர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இவ்விழாவில் பங்கேற்றனர்.
பூங்குடி ஊர் சார்பில் தெய்வத்தமிழ்ப் பேரவை அன்பர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. இவ்விழா பங்கேற்ற அனைவருக்கும் திருப்புகழ் நூல் வழங்கப்பட்டது. மேலும் அனைவருக்கும் உணவுப் பரிமாற்றப்பட்டது. கடும் மழையிலும் மிக சிறப்பான திருப்புகழ் விழா நடந்து நிறைவேறியது.
—
செய்தி உதவி:
திரு. சுப்பிரமணிய சிவா வேலுசாமி.