ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்தா கிசான் மோர்ச்சா)
செய்தி வெளியீடு
367வது நாள், 28 நவம்பர் 2021
* டிசம்பர் 4-ம் தேதி நடைபெறும் எஸ்.கே.௭ம்.இன் அடுத்த கூட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து போராட்டம் நடத்தும் விவசாயிகள் முடிவு எடுப்பார்கள் – எஸ்.கே.௭ம். அனுப்பிய கடிதத்திற்கு முறைப்படி பதில் அளிக்க மோடி அரசுக்கு அவகாசம் அளிக்கப்பட்டு, நவம்பர் 29ஆம் தேதி முதல் நாடாளுமன்றம் வரை நடத்த திட்டமிடப்பட்ட டிராக்டர் பேரணி, 29-ம் தேதியிலிருந்து நிறுத்தி வைக்கப்படும் – பிரதமரால் அறிவிக்கப்பட்ட குழு, அமைக்கப்படுவதன் மூலம், “எம்.எஸ்.பி மீதான விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறியது” என்று ஒன்றிய அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் கூறுவது தவறானது – எஸ்.கே.எம். !*
* மும்பை ஆசாத் மைதானத்தில் இன்று நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க ஷேத்காரி கம்கர் மகாபஞ்சாயத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர் !*
2020இன் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா 2021, நாளை நாடாளுமன்றத்தில் செயல்பாட்டிற்காக பட்டியலிடப்பட்டுள்ளது. மசோதாவில், சட்டங்கள் இரத்து செய்யப்படுவதற்கான காரணங்கள் முற்றிலும் தவறான விளக்கத்தை கொடுக்கிறது.
கூட்டத்திற்குப் பிறகு நேற்று அறிவித்தபடி, நவம்பர் 21, அன்று இந்தியப் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில், இந்திய அரசு எழுப்பிய அனைத்து கோரிக்கைகளுக்கும் முறையாகவும் முழுமையாகவும் பதிலளிக்கும் வரை காத்திருக்க ஐக்கிய விவசாயிகள் முன்னணி முடிவு செய்துள்ளது. நவம்பர் 29 முதல் நாடாளுமன்றம் முடியும் வரை திட்டமிடப்பட்ட டிராக்டர் பேரணியை நிறுத்தி வைப்பதன் மூலம், மோடி அரசாங்கத்திற்கு அதிகப்படியான நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெறும் அடுத்த கூட்டத்தில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பார்கள்.
*மும்பையின் ஆசாத் மைதானத்தில் இன்று ஒரு பெரிய ஷேத்காரி கம்கர் மகாபஞ்சாயத்து நடந்தது, குறைந்தது 100 அமைப்புகள் ஒன்று கூடின. மகாராஷ்டிரா முழுவதிலுமிருந்து விவசாயிகள், தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள் இளைஞர்கள் மற்றும் அனைத்து மதங்கள் மற்றும் சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த மகாபஞ்சாயத்தில் திரண்டனர். இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பல எஸ்.கே.எம் தலைவர்கள் கலந்து கொண்டனர்.*
பிஜேபி-ஆர்.எஸ்.எஸ் அரசாங்கத்திற்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை, விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற்றதற்காக, விவசாயிகள் கொண்டாடினர். எஸ்.கே.எம். மீதமுள்ள கோரிக்கைகளுக்காகவும், நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களை ரத்து செய்வதுடன், தனியார்மயமாக்கல், டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலையைப் பாதியாகக் குறைத்தல், MNREGA இன் கீழ் வேலை நாட்கள் மற்றும் ஊதியத்தை இரட்டிப்பாக்கி நகர்ப்புறங்களுக்கு விரிவுபடுத்துதல் ஆகியவற்றிற்காக போராடவும் தனது உறுதியை அறிவித்தது . லக்கிம்பூர் கேரி தியாகிகளின் வீரச்சாம்பல் பயணம், அக்டோபர் 27 அன்று புனேவில் இருந்து துவங்கியது. கடந்த ஒரு மாதத்தில் மகாராஷ்டிராவின் 30 மாவட்டங்களுக்கு மேல் பயணித்தது. இதைத் தொடர்ந்து, ஆசாத் மைதானத்தில் நடந்த மகாபஞ்சாயத்துக்குப் பிறகு, மாலை 4 மணியளவில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் லக்கிம்பூர் கேரி படுகொலை தியாகிகளின் வீரச்சாம்பல் கேட்வே ஆஃப் இந்தியா பகுதியில் அரபிக்கடலில் கரைக்கப்பட்டது.
இன்று, மாபெரும் சமூக சீர்திருத்தவாதியான மகாத்மா ஜோதிராவ் பூலேயின் நினைவு தினம். அவருக்கு எஸ்.கே.எம். ஆழ்ந்த அஞ்சலி செலுத்துகிறது.
*ஒன்றிய அமைச்சர் திரு. நரேந்திர சிங்கின் ஊடகக் கருத்துக்கள் சரியானவை அல்ல. பிரதமரால் அறிவிக்கப்பட்ட குழு அமைக்கப்படுவதன் மூலம், “குறைந்தபட்ச ஆதரவு விலை மீதான விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறியதாக” அவர் கூறுவது தவறானது மற்றும் நியாயமற்றது. நாளை முதல் தொடங்கும் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் தற்போது பட்டியலிடப்பட்டுள்ள மின்சாரத் திருத்த மசோதா 2021 குறித்தும் விவசாய அமைச்சர் மௌனம் சாதிக்கிறார். முக்கியமாக, விவசாயிகளுக்கு எதிரான வழக்குகளைத் திரும்பப் பெறுவதும், இயக்கத்தின் தியாகிகளுக்கு இழப்பீடு வழங்குவதும் மாநில அரசுகளின் விடயங்கள் என்றும், இந்த விடயங்களில் அவர்கள் முடிவு எடுப்பார்கள் என்றும் திரு தோமர் கூறினார். இந்த இரண்டு விடயங்களையும் நிறைவேற்றுவதாக பஞ்சாப் ஏற்கனவே உறுதிமொழிகளைக் கொடுத்துள்ளது. மற்ற மாநிலங்கள் அனைத்தும் பாசக ஆளும் மாநிலங்கள் என்பதாலும், பாசக ஆளும் இந்திய அரசின் விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளினால்தான் இந்தப் போராட்டம் எழுந்துள்ளதாலும், அதற்கான உறுதிமொழி ஒன்றிய அரசிடம் பெறவேண்டியது அவசியம்.
பாசக ஆளும் மாநிலங்கள் உறுதிமொழிக்கு இணங்குவதை உறுதி செய்ய வேண்டும். எஸ்.கே.எம்.இன், அஜய் மிஸ்ரா டேனியைக் பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை குறித்தும் அமைச்சர் மௌனமாக இருக்கிறார். கடந்த 12 மாதங்களாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக குறைந்தது 686 விவசாயிகள் உயிர் தியாகம் செய்துள்ளனர். கடந்த ஒரு வருடத்தில் அமைதியான போராட்டங்களுக்காக சுமார் 48000 விவசாயிகள் பல போலீஸ் வழக்குகளில் சிக்கியுள்ளனர் என்று அரியானா விவசாய தலைவர்கள் மதிப்பிட்டுள்ளனர். பலர் மீது தேசத்துரோகம் மற்றும் கொலை முயற்சி, கலவரம் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். உத்திரபிரதேசம், சண்டிகர், உத்தரகாண்ட், டெல்லி மற்றும் மத்தியப் பிரதேசத்திலும், இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பஞ்சாபில், இதுவரை தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் தனது அரசாங்கம் திரும்பப் பெறுவதாக முதல்வர் திரு சரண்ஜித் சிங் சன்னி அறிவித்துள்ளார்.*
*இந்தப் பின்னணியில், விவசாயிகளுடனான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்காமல், விவசாயிகள் போராட்டத்தை ஜனநாயக விரோத, ஒருதலைப்பட்சமான வழிகளில் விவசாயிகளின் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஒன்றிய அரசு எதிர்பார்க்க முடியாது.*
*இந்தச் சட்டங்கள் இரத்து செய்யப்படுவதன் மூலம் போராட்டம் நடத்தும் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றை இந்திய அரசு நிறைவேற்றும் வேளை (நாளை) ஒரு வரலாற்று நாளாக இருக்கும்.* நாளை, விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை ஒன்றிய அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், ‘வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா 2021’ ஐ அறிமுகப்படுத்தி பரிசீலனைக்கு அனுப்ப உள்ளார். 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான ஒரு மசோதா இது. 2021ஆம் ஆண்டின் 143ஆம் எண் கொண்ட இந்த மசோதா, 2020ஆம் ஆண்டில் இந்திய விவசாயிகளின் மாபெரும் வரலாற்றுப் போராட்டங்களுக்கு வழிவகுத்த சட்டங்களைக் குறிப்பிடும் அறிக்கையில், விவசாயிகளின் நலனுக்காக சட்டங்களைத் தொடர்ந்து பாதுகாப்பது தேவை என்றும், ஒரு குழு மட்டுமே புரிந்து கொள்ளவில்லை என்றும் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. இந்த சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தச் சட்டம் இரத்து செய்யப்படுவதை விடுதலை என்று கூறுகின்றனர்.
*இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் நடந்த போராட்டத்திற்குப் பிறகு, அமெரிக்காவின் வின்னிபெக்கில் உள்ள மனிடோபாவில் நேற்று போராட்டம் நடைபெற்றது. போராட்டம் நடத்தும் இந்திய விவசாயிகளுக்கு, இத்தாலி மற்றும் பிரான்ஸ் விவசாயி குழுக்கள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் விவசாயிகள் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக, ஒருநாள் வீட்டில் தூங்காமல் வெளியே பெட்டி வண்டிகளில் தூங்கினர்.*
ஒவ்வொரு நாளும், விவசாயிகளின் போராட்டத்திற்கு உத்வேகம் கொடுத்து, முன்னெப்போதும் இல்லாத வகையில் மாற்றக்கூடிய அசாதாரணமான மற்றும் உறுதியான எதிர்ப்பாளர்களைப் பற்றி பல விடயங்கள் வெளிவருகின்றன. பஞ்சாபில் உள்ள லூதியானாவைச் சேர்ந்த 25 வயதான ரத்தன்தீப் சிங், நவம்பர் 26ஆம் தேதி முதல் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சிங்கு எல்லையை அடைந்துள்ளார். அவர் எப்போதும் சக்கர நாற்காலியோடு மட்டுமே இருக்கக் கூடியவர், அங்குச் சென்றுள்ளார். கடந்த ஒரு வருடம் முழுவதையும் போராட்டக் களங்களில் கழித்த பல எதிர்ப்பாளர்கள் உள்ளனர். லூதியானாவைச் சேர்ந்த 86 வயதான நிஷ்தர் சிங் கிரேவால் அவர்களில் ஒருவர். 70 வயதான குர்தேவ் சிங் மற்றும் 63 வயதான சாது சிங் கச்சர்வால் ஆகியோர் கடந்த 365 நாட்களையும் சிங்கு எல்லையில் கழித்துள்ளார்கள்.
*அரியானாவில் நேற்று ஜே.ஜே.பி. சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக போராட்டம் நடந்தது.* எம்.எல்.ஏ தேவேந்திர சிங் பாப்லி உள்ளூர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பது குறித்த தகவல் கிடைத்ததும், விவசாயிகளின் பெரும் குழு ஒன்று, கருப்புக் கொடி காட்டியதால் ராட்டியா என்ற இடத்தில் தனது நிகழ்ச்சியை அவர் ரத்து செய்தார்.
அறிக்கையை வழங்கியவர்கள்:
பல்பீர் சிங் ராஜேவால், டாக்டர் தர்ஷன் பால், குர்னம் சிங் சாருனி, ஹன்னன் மொல்லா, ஜக்ஜித் சிங் டல்வால், ஜோகிந்தர் சிங் உக்ரஹான், ஷிவ்குமார் சர்மா ‘கக்காஜி’, யுத்வீர் சிங், யோகேந்திர யாதவ்*
வெளியீடு:
ஐக்கிய விவசாயிகள் முன்னணி,
தமிழ்நாடு.
—
செய்தி சேகரிப்பு:
திரு. ஜெயராஜப்பிரகாஷ்,
பேரளம்.