Home>>தமிழ்நாடு>>கோட்டூரில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்
கோட்டூரில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்
தமிழ்நாடுமருத்துவம்

கோட்டூரில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

கோட்டூரில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்ஒன்றிய பெருந்தலைவர் மணிமேகலை முருகேசன் தொடங்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் தோழர் க.மாரிமுத்து முகாமை பார்வையிட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தன்னுடைய வாழ்த்தை தெரிவித்தார்!

கோட்டூர் வட்டாரத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்கம் / திருவாரூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை உடன் இணைந்து கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 8.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கோட்டுர் ஒன்றிய பெருந்தலைவர் தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் கோட்டூர் ஒன்றியம் முழுவதிலும் இருந்து சுமார் 453 பேருக்கு கண்புரை, சர்க்கரை நோய், கண் நீர் அழுத்தம் மற்றும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து உள்ளிட்ட கண் தொடர்பான அனைத்திற்கும் பரிசோதனை செய்யபட்டது, கண்புரை அறுவை சிகிச்சைக்கு 134 நபர்களை பாண்டிச்சேரி அழைத்து சென்று இலவசமாக அறுவை சிகிச்சை வழங்க உள்ளனர்.

இந்த மாபெரும் கண்சிகிச்சை முகாமை திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து பார்வையிட்டு பயனாளிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

கோட்டூர் பன்னாட்டு லையன் நிர்வாகி கார்த்திகேயன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இந்த முகாமில் சிபிஐ ஒன்றியச்செயலாளர் எம்.செந்தில்நாதன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இ.மஞ்சுளா, கோட்டூர் ஊராட்சிமன்ற தலைவர் கேஜி.ஆனந்தன், கோட்டூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பாண்டிச்சேரி கண் மருத்துவமனை மருத்துவர்கள் திரு நவீன், திரு உமேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.


செய்தி உதவி:
தோழர் கா. லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.

Leave a Reply