Home>>அரசியல்>>திருச்சி மாவட்டம் வையம்பட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய 13வது மாநாடு
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவரலாறு

திருச்சி மாவட்டம் வையம்பட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய 13வது மாநாடு

திருச்சி மாவட்டம் வையம்பட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய 13வது மாநாடு: திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து பங்கேற்று கொடியேற்றி சிறப்புரை.

இன்று (05/12/2021) திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஒன்றிய 13வது மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினரும் திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் பங்கேற்று கொடியேற்றி மாநாட்டை வாழ்த்தியும் பேசினார்.

மேலும் வையம்பட்டி ஒன்றி பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட பொன்னியார் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக உள்ள கடவூர் ஊராட்சியை திருச்சி மாவட்டத்தோடு இணைக்க வேண்டும், பொன்னியார் அணைபகுதியை முதன்மை சுற்றுலா தளமாக மேம்படுத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.

இந்த மாநாட்டியல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாக்குழு உறுப்பினரும் திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் தோழர் த.இந்திரஜித், வையம்பட்டி ஒன்றியச் செயலாளர் ஏ.டி.சண்முகசுந்தரம், மற்றும் பிரதிநிதி தோழர்கள் பங்கேற்றனர்.


செய்தி உதவி:
தோழர் கா.லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.

Leave a Reply