Home>>கல்வி>>அம்மையார் உமையாள் இராமநாதன் அவர்கள் காலமானார்.
கல்விசெய்திகள்தமிழ்நாடு

அம்மையார் உமையாள் இராமநாதன் அவர்கள் காலமானார்.

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய ‘கல்வி வள்ளல்’ டாக்டர். அழகப்ப செட்டியார் அவர்களின் மகளும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினருமான டாக்டர். உமையாள் இராமநாதன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.

கல்வி நிறுவனங்களை நடத்துவதில் காட்டிய அக்கறை, பெண்கல்விக்கு கொடுத்த முக்கியத்துவம், சமூக நலப்பணிகளில் ஈடுபாடு ஆகியவற்றின் வழியாக திருமதி.உமையாள் இராமநாதன் அவர்கள் என்றைக்கும் நினைவு கூறப்படுவார்கள்.

அன்னாரை இழந்து வாடும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


திரு. TTV. தினகரன்,
தலைவர்,
அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம்.

Leave a Reply