தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் தமிழகம் முழுவதும் இன்றைய தினம் 58 ஆயிரத்து 463 சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 7 லட்சத்து 56 ஆயிரத்து 142 உறுப்பினர்களுக்கு ரூ.2749.85 கோடி மதிப்பிலான கடன் உதவிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றம் குறித்தும் சுய உதவிக்குழுவில் இணைந்து அவர்கள் ஆற்றி வரும் பணிகள் குறித்தும், பொருளாதாரம் மேம்பாடு அடைவதற்கு தேவையான உதவிகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுடன் மாண்புமிகு முதல்வர். திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை போலவே தமிழகம் முழுவதும் மற்ற மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் சுய உதவி குழுவினருக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.
கடலூரில் சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் அமைச்சர்கள் மாண்புமிகு திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வேளாண்மை – உழவர்நலத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு திரு. சி.வி. கணேசன், தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. ஐயப்பன் அவர்கள், திரு. சபா. ராஜேந்திரன் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களுடன் பங்கேற்றேன்.
—
திரு. தி. வேல்முருகன்,
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர்,
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்.