Home>>செய்திகள்>>கடலூர் மாவட்ட வள்ளலார் பணியகம் சார்பில் வள்ளலார் வழி இலவச மருத்துவ முகாம்!
செய்திகள்தமிழ்நாடுமருத்துவம்

கடலூர் மாவட்ட வள்ளலார் பணியகம் சார்பில் வள்ளலார் வழி இலவச மருத்துவ முகாம்!

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் பெண்ணாடம் வேதாத்திரி அறிவுத் திருக்கோயில் வளாகத்தில், (பெண்ணாடம் பேரூராட்சி பின்புறம்) – நேற்று சுறவம் (தை) – 12, (25.01.2022) செவ்வாய்கிழமை காலை 08.30 மணிமுதல் மதியம் 02.00 மணி வரை வள்ளலார் வழி இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

தமிழ்த்தேசியப்பேரியக்கப் பொதுச் செயலாளர் ஐயா கி. வெங்கட்ராமன் திருவிளக்கேற்ற வள்ளலார் பணியகத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்த்திரு. வே. சுப்ரமணிய சிவா திருவருட்பா பாட மருத்துவ முகாம் தொடங்கியது.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன் தொடக்கவுரையாற்றினார். பெண்ணாடம் அறிவுத் திருக்கோயில் தலைவர் திருமதி. வசந்தா இளங்கோவன், உலகத் திருக்குறள் கூட்டமைப்புப் பொதுச்செயலாளர் தமிழ்த்திரு. தா.கோ. சம்மந்தம் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

வள்ளலார் பணியகத்தின் முன்னணிச் செயல்பாட்டாளரும், கீரப்பாளையம் மெஞ்ஞான குடில் ஒருங்கிணைப்பாளரும் மரபு வழி மருத்துவர் ஞான. சுந்தரபாண்டியன் அவர்கள் தலைமையில் பெ.த. செந்தில்குமார், நீரோத்தரப்பிஸ்ட், ஜெ. பாலமுருகன் (நீரோதரப்பி, பாத சிகிச்சை, அக்குபஞ்சர், வர்மா) அ. சிந்துஜா (நீரோதரப்பி), மரபு மருத்துவர் வரதராசன் உள்ளிட்டோர் மருத்துவ சிகிச்சை அளித்தனர்.

இம்மருத்துவ முகாமில் மூட்டுவலி, இடுப்புவலி, தோல் வியாதி, கழுத்துவலி, குடல் புண், தொடர் இருமல் தும்மல், ஒற்றை தலைவலி, தொடை நரம்பு வாதவலி, ஒழுங்கற்ற மாதவிடாய், வெள்ளைப்படுதல், குழந்தையின்மை, முடிக்கொட்டுதல் உள்ளிட்ட பல நோய்களுக்கு மருத்துவம் செய்யப்பட்டது. மேலும் வள்ளலாரின் ஐங்கூட்டு சூரணம், கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் 150 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு சிகிச்சை எடுத்துக் கொண்டனர்.


செய்தி உதவி:
தெய்வத் தமிழ்ப் பேரவை.

Leave a Reply