Home>>காவல்துறை>>தமிழகத்தில் மீண்டும் ஒரு காவல் நிலைய சிறைக்கொட்டில் மரணம் நிகழ்ந்திருப்பது வெட்கக் கேடானது.
காவல்துறைசெய்திகள்தமிழ்நாடு

தமிழகத்தில் மீண்டும் ஒரு காவல் நிலைய சிறைக்கொட்டில் மரணம் நிகழ்ந்திருப்பது வெட்கக் கேடானது.

கன்னியாகுமரி மாவட்டம், முல்லைசேரிவிளை பகுதியைச் சேர்ந்த இளைஞர் அஜித் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு, காவல்நிலையத்திலே மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

அண்மைக் காலமாக அதிகரித்து வரும் இத்தகைய சிறைக்கொட்டில் மரணங்களைத் தடுக்க காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் என்ன செய்யப் போகிறார்?

ஒவ்வொரு முறை இப்படி நடக்கும் போதும் காவல்துறையினரோடு சேர்ந்து கொண்டு ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி பூசி மெழுகுவதையே வாடிக்கையாக வைத்திருப்பது சரியா?

புகாருக்கு ஆளானவர்களை சட்டத்திற்குட்பட்டு விசாரிக்க வேண்டியதன் அவசியம், காவல்துறையினருக்கு புரியும் வகையில் தெளிவான உத்தரவினைப் பிறப்பிக்க வேண்டும்.

காவல் நிலையங்கள் மனிதநேயத்தோடும், மனசாட்சியோடும் நடந்து கொள்ள வேண்டிய இடங்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு முதலமைச்சருக்கும், டி.ஜி.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கும் இருக்கிறது.


திரு. டிடிவி. தினகரன்,
தலைவர்,
அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம்.

Leave a Reply