மகாபாரதத்தை எழுதிய(வர்) வேதவியாசர் என்பர். சாலையில் நடந்து வரும் பொழுது ஓரறிவு உயிர் ஊர்வனவான மண்புழு ஒன்று அதற்குரிய மிகுந்த வேகத்துடன் நடைபாதையை கடக்க முற்பட்டது. அதனை உற்று நோக்கி கவனித்த வேத வியாசர் என் இவ்வளவு வேகமாக செல்கிறாய் என்று கேட்டார்? அதற்கு மண்பூழு நடைபாதையில் வாகனங்கள், மனிதர்கள் என பல செல்கின்றன.
அவர்களின் கால்களிலோ (அல்லது) வாகன சக்கரங்களிலோ நான் நசுக்கப்பட்டு இறந்து விடுவேன்! என் உயிரை பாதுகாத்துக் கொள்ள வேகமாய் செல்கிறேன் என்றது. அதைக் கேட்ட வேதவியாசர், புன்னகையுடன் நீ வாழ்வதால் என்ன பயன் என்று கேட்டார்!
அதற்கு மண்புழு, நான் வாழ்வதற்காக இறைவன் இந்த உயிரை எனக்கு தந்துள்ளார். அவரால் மீண்டும் எடுக்கப்படும் வரை நான் வாழ்வேன் என்று வியப்பாய் பதில் கூறியது!
வாழ்க்கையில் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பதற்கு மாறாக, எவ்வாறு படைக்கப்பட்டாலும் வாழ்வுண்டு என்பதை நிரூபிக்கிறது மண்புழு!
—பா.தமிழரசி, மன்னார்குடி.
(2050 பங்குனி மாத மின்னிதழிலிருந்து)