Home>>அரசியல்>>தமிழ்நாடு பெயர் காரணகர்த்தா தியாகி திரு.சங்கரலிங்கனார் நினைவு தினம்
அரசியல்

தமிழ்நாடு பெயர் காரணகர்த்தா தியாகி திரு.சங்கரலிங்கனார் நினைவு தினம்

13.10.1956 இன்று நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் மாறுவதற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்து அதற்காக தன் உயிரையே தியாகம் செய்த தியாகி திரு. சங்கரலிங்கனார் அவர்களின் நினைவு தினம் இன்று.அவரைப்பற்றிய ஒரு பார்வை.

சென்னை கத்தோலிக்க மக்களின் தலையாரி மகன் மதராசன் பெயரில் “மதராசபட்டினம்” மதராசி என்றும், பின்பு வந்த சந்திரகிரி வம்சத்தின் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரில் “சென்னாபட்டினம்” என்றும் நம் மாநிலம் அழைக்கப்பட்டு இருந்த காலகட்டத்தில் அவ்வாறு ஏன் இருக்கவேண்டும் தமிழர்கள் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு என்றுதானே பெயர் இருக்கவேண்டும் என்று கொதித்தெழுந்தவர்களில் முதல் ஈக மறவர் சங்கரலிங்கனார் அவர்கள்.

இளம் வயதிலேயே வ.ஊ.சியின் சுதந்திர போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு தன்னையும் இணைத்துக்கொண்டார். காந்தியின் கதர் ஆடை இயக்கத்தில் பங்குபெற்று விருதுநகரில் முதன் முதலில் இன்றளவில் உள்ள “காதி வஸ்திராலயம்”என்ற பெயரில் கடை திறந்தார்.

1953 ல் முதன் முதலாக மா.பொ.சி அவர்கள் சென்னை மாகாணம் பிரிக்கப்பட்டு தமிழ் ராஜ்ஜியம் அமைக்க வேண்டுமென கோரிக்கையை முன்வைத்தார். பின் 1954 ல் கா.சுப்பிரமணிய பிள்ளை அவர்களால் தமிழ்நாடு கோரிக்கை மீண்டும் வைக்கப்பட்டு பின் 1955ல் முத்துராமலிங்க தேவரும் தமிழ் ராஜ்ஜியம் அமைக்காவிடில் என்ன பயன்? என்று சட்டமன்றத்தில் பேசினார்.

இந்தநிலையில் 27.7.1956ல் ஒரு ஓலைக்குடிசையில் பேராயக்கட்சி கொடியுடன் 13 கோரிக்கைகளுடன் “தமிழ்நாடு” பெயர்மாற்றம் செய்யக்கோரி உண்ணாநிலையை தொடங்கினார் சங்கரலிங்கனார்.

உண்ணாநிலை 60நாட்கள் கடந்தும் அன்றைய முதல்வர் காமராசர் செவி சாய்க்கவில்லை.அவர் நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம்.

70 நாட்கள் கடந்தும் <சங்கரலிங்கனார் மெலிந்த உடலுடன் மதுரை எர்ஸிகின் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். அங்கும் உண்ணாதிருந்து நாடி நரம்புகள் ஒடுங்கி 79 வது நாளில் 13.10.56 உயிர் பிரிந்தார்.

1961ல் மீண்டும் அப்போதைய சோசலிச கட்சி சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை மீண்டும் அதே தமிழ்நாடு கோரிக்கையை முன்னெடுத்தார். அன்றைய காங்கிரசு கட்சி அப்போதும் பெயர் மாற்றம் செய்ய ஒப்புக்கொள்ளவில்லை. பலபோராட்டங்கள் நடந்தன.

1967ல் திமுக ஆட்சி அமைத்ததும் மீண்டும் மேற்கு வங்க கம்யூனிஸ்ட் தலைவர் “தமிழ்நாடு” கோரிக்கையை முன்வைத்து அப்போது விளக்கம் கேட்ட காங்கிரசின் எதிர்ப்புநிலைக்கு சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரம் மற்றும் தொல்காப்பியத்தையும் அன்றைய முதல்வர் அறிஞர்.அண்ணா அவர்கள் ஆதாரமாக மேற்கோள் காட்டி 1967 தீரமானம் இயற்றி 1968 நவ1ல் “தமிழ்நாடு” என்று சட்டமுன்வடிவு தந்தார்.

தமிழுக்காக எழுதிய,பாடிய,செய்யளிசைத்த,இலக்கியங்கள் தந்த தமிழ்மொழிக்காக உயிர்நீத்த எண்ணற்ற அரிய தமிழ்சான்றோர்களின் வரிசையில் “தமிழ்நாடு”என்ற பெயருக்காக 76 நாட்கள் உண்ணாமல் தன் உடலை மாய்த்த தெய்வத்திரு.சங்கரலிங்கனாரை போற்றுவோம்🙏🙏🙏

நா.செல்வமுருகன்
மேலவாசல்

Leave a Reply