Home>>விளையாட்டு>>ஆசிய கோப்பை கிரிக்கெட் 2022-சாதித்த இந்திய மகளிர் படை.
விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட் 2022-சாதித்த இந்திய மகளிர் படை.

கிரிக்கெட் : உலக கோப்பை போட்டிகள் போல எதிர்பார்ப்பு நிறைந்தது ஆசிய கோப்பை போட்டிகள்…

ஆடவர்க்கான ஆசிய கோப்பை போட்டிகள் 1984 முதல் நடந்து வருகிறது..

கடந்த மாதம் நடைபெற்ற போட்டியில் இந்திய ஆடவர் அணி பாகிஸ்தான் இலங்கை கூட போட்டியிட்டு தோல்வி தழுவி வெளியேறியது…

இலங்கை, பாக்கிஸ்தானை வீழ்த்தி பட்டம் வென்றது…
இது ஆடவர் ஆசிய கோப்பை பற்றிய நிலவரம்..

இதே போல மகளிர் கிரிக்கெட் அணிக்கான ஆசியா கோப்பை போட்டிகள் 2004 முதல் நடந்து வருகிறது..

2004 முதல் 2016 வரை 6 முறை இந்திய மகளிர் அணி கோப்பையை வென்றுள்ளது..

அதில் 5 முறை இலங்கையும் 1 முறை பாகிஸ்தானும் இறுதி போட்டியில் மோதி இருந்தன..

2018 நடைபெற்ற போட்டியில் இந்தியாவை வீழ்த்தி வங்கதேச மகளிர் அணி முதன் முறையாக வரலாறு படைத்தது…
அதன் பிறகு 4 வருடங்களுக்கு பிறகு தற்போது ஆசிய 20 ஓவர் போட்டிகள் நடந்து வருகிறது..

நடப்பு சாம்பியன் வங்கதேச மகளிர் அணி அரை இறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது..

கிரிக்கெட் போட்டிகளில் பிரபலம் ஆகாத தாய்லாந்து அணி முதன் முறையாக அரை இறுதிக்கு நுழைந்து வரலாற்றில் இடம் பிடித்தது..

வியாழக்கிழமை நடைபெற்ற அரை இறுதியில் இந்தியா, இலங்கை அணிகள் வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியது…

இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் அபார வெற்றி பெற்று 7 வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா…

-ஆனந்த் ரெய்னா

Leave a Reply