Home>>இந்தியா>>இணைய மருந்து வர்த்தகத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் குழுமம்
இந்தியாசெய்திகள்மருத்துவம்வணிகம்

இணைய மருந்து வர்த்தகத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் குழுமம்

நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இணைய வணிகத்தில் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறது. இணைய வர்த்தகத்தில் பலசரக்கு, காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்ய ஜியோ மார்ட் சமீபத்தில் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில், நெட்மெட்ஸ் குழுமத்தில் முக்கிய பங்குதாரரான விட்டலிக் ஹெல்த் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 60 விழுக்காடு பங்குகளை ரூ.620 கோடிக்கு ரிலையன்ஸ் குழுமம் கையகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நெட்மெட்ஸ் நிறுவனத்தின் நேரடி உரிமையாளராக ரிலையன்ஸ் மாறியுள்ளது.மருந்து விற்பனை, குழந்தைகளுக்கான பொருட்கள் மற்றும் மருத்துவர்கள் புக்கிங் ஆகியவற்றை நெட்மேட்ஸ் நிறுவனம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் கடந்த 2015ம் ஆண்டு துவங்கப்பட்ட நெட்மெட்ஸ், உரிமம் பெற்ற இ-பார்மசி போர்ட்டல் போன்ற நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை நேரடியாக வீடுகளுக்கு, இந்தியாவில் உள்ள மற்ற மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து வினியோகித்து வருகிறது.

கொரோனா நெருக்கடி காரணமாக ஆன்லைன் ஷாப்பிங் தேவை அதிகரித்துள்ளதால், அமேசான், வால்மார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான பிளிப்கார்ட், ரிலையன்சின் இணைய வழி மளிகை சேவை, ஜியோ மார்ட் உள்பட பல்வேறு நிறுவனங்களிடையே போட்டி அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அமேசான் நிறுவனத்திற்கு நேரடி போட்டியாக அமைந்துள்ளது ரிலையன்ஸ். இணைய வர்த்தகத்தில் விரைவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ள ரிலையன்ஸ் நிறுவனம், இணைய வர்த்தகத்தில் களமிறங்கும் பட்சத்தில் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்குப் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம், தனது ஜியோ டெலிகாம் சேவை, நாடு முழுவதும் வைத்திருக்கும் ரீடெய்ல் கடைகள் மற்றும் இதர மொபைல் சேவைகளை இணைத்து, ஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்க உள்ளதாக தெரிகிறது. அமேசான் மற்றும் வால்மார்ட் நிறுவனத்தின் ஃப்ளிப்கார்டிற்கு, நேரடியாக ரீடெய்ல் கடைகள் இல்லை என்பதால், ரிலையன்ஸுக்கு இருக்கும் சாதகம் இந்நிறுவனங்களுக்கு இல்லை என சந்தை நோக்கர்கள் கூறுகின்றனர்.

தனது திட்டம் குறித்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, “குஜராத்தில் எங்களுக்கு 12 லட்சம் சிறிய சில்லறை வியாபாரிகள் உள்ளனர். அதை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு போகும் வகையில் புதிய இணைய வர்த்தகத் திட்டத்தை நாங்கள் தொடங்க உள்ளோம். இதற்கு ஜியோ சேவை பெரிதும் உதவும்” என்று தகவல் தெரிவித்துள்ளார்.

இணைய வழி மருந்து விற்பனை தொடர்பான விதிமுறைகளை மத்திய அரசு இதுவரை இறுதி செய்யவில்லை. இந்நிலையில், ‘இணையம் வழியாக மருந்துகளை விற்பது, மருந்துகளை சரிபார்க்காமல் விற்பனை செய்ய வழிவகுக்கும்’ என மருந்தக உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


பிரசன்னா,
மன்னார்குடி

படம் : Mukesh Ambani, fourth richest person in the world following a huge rise in wealth during 2020. Photo: Instagram/@mukeshambaniofficial

Leave a Reply