Home>>இதர>>செல்லப்பிராணிகள்
இதர

செல்லப்பிராணிகள்

– அ.பிரவீன் குமார், மன்னார்குடி
விலங்குகள் நல ஆர்வலர் – Jillu Farms
(2048 ஆவணி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …)


மனிதன் தோன்றுவதற்கு முன்பே இவ்வுலகில் வாழ்ந்தவைகள் விலங்குகளும், பறவைகளும். மனிதன் தோன்றலுக்கு பின் இவைகளை நம் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக்கொண்டோம்.

பொதுவாக விலங்குகள் அனைத்தும் காட்டில் வாழ்ந்தவை இவைகளை நாம் நம் தேவைக்காக வீட்டு விலங்காக மாற்றிக்கொண்டோம். அதில் சில ஆடு, மாடு, எருமை, நாய், பூனை, முயல், பறவை வகைகளில் சில காலப்போக்கில் இந்த விலங்குகள் நம்முடன் நெருங்கிய உறவை வளர்த்துக்கொண்டது.

நம் குழந்தைகளை செல்லம் என்று சொல்வது போல் வீட்டில் வளர்க்கும் விலங்குகளை கூட செல்லமாக பெயர் சூட்டி அழைக்கிறோம்.

வீட்டு விலங்குகளில் அதிகம் அனைவராலும் விரும்பி வளர்ப்பது நாய்கள் தான் ஏன் என்றால் இவை நம்முடன் மிக நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்தி கொண்டது.

நம் மனதில் நினைப்பதை செய்யும் அளவிற்க்கு தன்னை வடிவமைத்துக்கொண்டது. நாய்களை அனைவரும் விரும்ப காரணம் நன்றியுடன் இருப்பதே. ஒரு முறை நாம் ஒரு நாய்க்கு உணவளித்துவிட்டால் அவை அதை மறப்பது இல்லை பத்து ஆண்டுகள் கழித்து நம்மை பார்த்தாலும் வாலை ஆட்டிக்கொண்டே நம் அருகில் வரும்.

நாய்களின் அறிவு திறமை அதிகம் எனவே தான் இவைகளை காவல்துறை மற்றும் இராணுவத்திலும் பயன்படுத்துகிறார்கள். நாம் காலையில் வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்பும் போது நம்மை முதலில் வரவேற்பது இவைகளே.

அவைகளின் பாசத்தை வெளிப்படுத்த தாவுவதும், குதிப்பதும், குலைப்பதும், நம்மை அதன் நாக்கால் நக்கி கொடுப்பதும் இவ்வாறு இவைகள் செய்வதால் வேலைக்கு சென்று வந்த உடல் சோர்வும் மனச்சோர்வும் இல்லாமலேயே போய்விடும்.

சில நேரங்களில் தன்னை வளர்த்தவரை காப்பாற்ற பிற விலங்குகளிடமும் ஏன் மனிதர்களிடமும் சண்டையிட்டு தன் உயிரையே தியாகம் செய்திருக்கின்றன. நம் எல்லை சாமி, குலதெய்வம் என்று சொல்லும் வீரனார், அய்யனார்போன்ற எல்லை சாமிகளும் நாய்களை வேட்டைக்கும் காவலுக்கும் பயன்படுத்தியதற்கு சான்றாக அவர்களில் சிலைக்கு அருகில் கம்பீரமான தோற்றத்தில் நாய்களின் சிலையும் இருக்கும். இராசராச சோழன் போர் படையில் கூட நாய்களும் இருந்துள்ளது.

இதற்கு சான்றாக தஞ்சை பெரிய கோவிலில் உள்ள கல்வெட்டுக்களிலும் சுவரோவியங்களிலும் உள்ளன. இதில் இருந்த நாய்களின் சிறப்பும் பெருமையும் தெரிகிறது. நான்கு வருடங்களுக்கு முன்பு அரபு நாட்டில் குப்பையில் விசப்பட்ட பிறந்து மூன்று நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தெரு நாய் பார்த்து அந்த குழந்தையை தன் வாயால் கவ்வி அருகில் இருந்த வீட்டின் வாசலில் எடுத்து கொண்டு போய் போட்டு அந்த வீட்டின் உரிமையாளரை குலைத்து அவர் வரும் வரை காத்திருந்து அந்த குழந்தையின் உயிரை காப்பாற்றி இருக்கிறது.

ஏன் ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு அருகில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தில் ஒரு பெண் சமுக விரோதிகளால் கத்தியால் அவர் தங்கி இருக்கும் விடுத்தியின் வாசலில் கத்தியால் தாக்கப்பட்டார் அப்போது அங்கு இருந்த இரண்டு தெரு நாய்கள் அந்த வாலிபரை கடித்து அந்த பெண்ணை காப்பாற்றியது ஒட முயன்ற அந்த கயவனையும் பிடித்து பொது மக்களிடம் ஒப்படைத்து.

வீட்டில் நாய்கள் வளர்ப்பதால் அவை நம் குடும்பத்தில் ஒர் உறுப்பினராகவே மாறிவிடுகிறது. நாம் அவைகளுடம் நேரம் செலவிடுவதால் நம் மனநிலை அமைதி பெருகிறது.

அறிவியல் ரீதியாக பார்க்கையில் செல்லப்பிராணிகள் ழளர்ப்பதால் அவர்களுக்கு இரத்த அழுத்தம், மன அழுத்தம், உடல் சோர்வு, தனிமையான உணர்வு இது போன்ற நோய்கள் வருவது இல்லை என்று ஒர் ஆராய்சி சொல்கிறது.

குறிப்பாக பறவைகள் வீட்டில் வளர்ப்பதால் அவை இடும் கூச்சல் காதுக்கு இனிமையாகவும் மன அழுத்தம், இரத்த அழுத்தம், இதய பலவீனம் இவைகளை தடுக்கிறது.

வீட்டில் வண்ணமீன்கள் வளர்ப்பதால் அதை பார்க்கும் போது மன அமைதி கிடைக்கிறது வீட்டில் நல்ல சூழல் உருவாகிறது.

வீட்டில் நாய்கள் வளர்ப்பதால் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களுக்கு வயதானவர்களுக்கும் ஒர் நல்ல பாதுகாப்பாகவும் துணையாகவும் அமைகிறது. அவர்களின் தனிமை உணர்வையும், தனிமையின் அச்சத்தையும் செல்ல பிராணிகள் குறைக்கின்றது அல்லது தடுகின்றது.

Leave a Reply