Home>>இதர>>சுமைலி (Smiley)
இதர

சுமைலி (Smiley)

— பாலாஜி சுதந்திரராஜன், மன்னார்குடி
(2048 ஆவணி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …)


இன்றைக்கு அனைவரது விரல்களில் அகப்பட்டும் மனதில் புதைப்பட்டும் கிடக்கும் உணர்வுகளுக்கான ஒரு அடையாளம் அல்லது குறியீடு என்றும் சொல்லலாம். உதாரணத்திற்கு பண்டைய காலத்தில் பயணம் செய்தவர்கள் அடுத்து வருவதற்கும், வருபவர்களுக்கும் ஒரு பொருள் தரும் உருவத்தை பாறைகளில் பதிவு செய்து சென்றார்கள். 1963 ல் ஒரு மஞ்சள் வட்டத்தை முகமாகவும் அதில் கண்கள்களாக இரு கரும்புள்ளிகளும் வாய் பகுதிக்கு வளைவான ஒரு வரியுடனும் அறிமுகமானது இந்த சுமைலி.

இன்று நமது பயன்பாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ப இன்று 843 ஆக வளர்ந்து நிற்கிறது. இதில் கோபம், நக்கல், மகிழ்ச்சி, துக்கம், காதல், அன்பு என அனைத்து உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் அளவுக்கு அமைந்திருப்பதே இதன் சிறப்பு.

இவை ஒவ்வொருவரின் வாழ்கையிலும் எவ்வளவு மகிழ்ச்சியையும், துக்கத்தையும், ஏமாற்றங்களையும் கொடுத்திருக்கும் என்பதை அலசிவிட்டு வருவோம்.

இப்பொழுதுள்ள காலகட்டத்தை நாம் சுமைலிக்கு முன் சுமைலிக்கு பின் என்றே பிரிக்கலாம் அந்த அளவுக்கு இன்று நம் வாழ்க்கையுடன் ஒன்றி போய்விட்டது இந்த சுமைலி.

சுமைலிக்கு முன்

ஒரு கருத்து பரிமாற்றமோ அல்லது உறையாடும் போதும் நம்முள் ஏற்படும் உணர்வானது நம் முகம் மூலம் வெளிபடும் அப்போது அனைவரின் செயலும் நம் உணர்வுகளுக்கு ஒன்றியே இருக்கும். இது தான் இயற்கை.

உதாரணத்திற்கு சில நிகழ்வுகளை எடுத்துக்கொள்வோம்.

நண்பர்களிடம் பேசும் போது ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வது இயல்பு. நண்பனை கிண்டல் செய்யும் போது சில பட்டை பெயர் வைத்து கூப்பிடுவோம். அது நமக்கு மகிழ்ச்சியாக இருக்கும் அவர் மட்டும் வருத்தமாக இருப்பார். பின் அதை பேசி சரி செய்துக்கொள்வோம். அத்துடன் அந்த நிகழ்வு முடிந்துவிடும்.

அதே போல் தான் காதலை காதலியிடம் பதிவு செய்யும் போதும். காதலை கடிதத்தில் எழுதி கொடுக்கும் போது இருக்கம் நடுக்கம் வார்த்தைகளால் சொல்ல இயலாது. அப்போது இருவர் முகத்திலும் தோன்றும் உணர்வுகளால் இருவருமே உண்மையை புரிந்துக் கொள்வார்கள்.

அதேபோல் நாம் கடிதத்தில் நம் கைகளால் தீட்டிய சொற்களும், வடிவங்களும் ஒரு தனிச்சிறப்புடையதாக இருக்கும்.

இதே போல் வாழ்வில் ஒவ்வொரு நிகழ்விலும் நாம் கோபம், வெட்கம், சிரிப்பு, அச்சம், அழுகை என அனைத்து உணர்வுகளையும் முகத்தால் வெளிப்படுத்தினோம்.

சுமைலிக்கு பின்

இப்படி அனைத்து உணர்வுகளையும் முகத்தில் வெளிப்படுத்திய நாம் இன்று நம் கட்டை விரலிடம் தாரை வார்த்துவிட்டோம். ஆம், அது மட்டுமல்ல ஒரு சிலையாகவே தான் இருக்கிறோம். இது நம் மனதில் தோன்றியதை முகத்தால் வெளிக்காட்ட விடாமலும் செய்கிறது.

உதாரணத்திற்கு ஒரு நல்ல நகைச்சுவையான செய்தியை படித்துவிட்டு சத்தமாக சிரிக்க தோன்றும் ஆனால் நாம் ஒரு மருத்துவமனையில் உளளோம் என்று வைத்துக்கொள்ளுங்கள் அங்கே நம்மால் சிரிக்க முடியாது. ஆனால் அதற்கான உணர்வை வெளிப்படுத்தியே ஆக வேண்டும் கட்டை விரல் அதற்கான செயலை செய்கிறது. ஆனால் ஒரு உணர்வை இப்படி அடக்குவது சரியா தவறா என எனக்கு தெரியவில்லை.

இது மட்டுமின்றி பல ஏமாளிகளையும் ஏமாற்றுபவர்களையும் உருவாக்குகிறது.

எப்படியென்றால், ஒருவருடன் சண்டை ஆனால் சமாதானம் செய்வது போல் சுமைலிகளை இடுவதால் அதை பார்ப்பவர் நம்பிவிடுவார். ஆனால் இவரோ மனதில் ஒன்றும் விரலில் ஒன்றும் வைத்திருப்பார்.

அதே போல் இந்த சுமைலி இல்லாத ஒரு செய்தியையும் நாம் படிக்க விரும்புவதில்லை.

செய்திக்கு ஏற்ற சுமைலியை பயன்படுத்துவது உடலுக்கு உயிர் கொடுப்பது போன்ற ஒன்றாகிவிட்டது.

நம் உணர்வுகளை என்ன தான் எழுத்தில் காட்டினாலும் அந்த உருன்டையில் (சுமைலி) தான் காண ஆசைப்படுகிறார்கள்.

இவ்வளவு ஏன்.?

செய்தியை அனுப்ப தட்டச்சு செய்ய தெரியாதவர்கள் கூட இந்த சுமைலியால் தான் சொல்ல வந்ததை தெரிவித்து விட முடியும். அந்த அளவிற்கு புரிதலில் எளிமை மிக்க விளங்குகிறது.

எனவே இந்த உருண்டை நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகவே மாறிவிட்டது.

மகிழ்ச்சியான தருணத்தை துன்பமாகவும், கவலையான தருணத்தை இன்பமாகவும் மாற்றும் வல்லமை இந்த சுமைலிக்கு உண்டு என்பது மிகையாகாது.

எனவே இன்பமோ, துன்பமோ இரண்டுமே அதை கையாள்வதில் தான் உள்ளது.
நாம் எழுதும், பேசும் மொழிகளுக்கு முன் இருந்த முறை இப்போது மீண்டும் சுமைலி மூலம் வெளிவருகிறது.

பள்ளிக்கு செல்லாமலே அடுத்தவர்களின் smiley பதிவுகளை உணரலாம்.

இவ்வளவு ஏன்.?

செய்தியை அனுப்ப தட்டச்சு செய்ய தெரியாதவர்கள் கூட இந்த சுமைலியால், தான் சொல்ல வந்ததை தெரிவித்து விட முடியும். அந்த அளவிற்கு புரிதலில் எளிமை மிக்க விளங்குகிறது.

மகிழ்ச்சியை விட வேறேதும் நம் வாழ்வை நிறைவு செய்ய முடியாது. அந்த வகையில் அனைவருடனும் மகிழ்வுடன் இருப்போம் என்று சொல்லி விடைபெறுகிறேன்.

Leave a Reply