Home>>கவிதை>>என் கணவனுக்காக…
கவிதை

என் கணவனுக்காக…

கனவினில் நீ வர கண்மூடி கிடக்கின்றேன்,
ஆனால் உறக்கமின்றி தவிக்கின்றேன் உன் நினைவுகளில்… 


காதல் கணவா,
காதலும் காணவில்லை; கனவும் வரவில்லை;
காரணமோ என் அருகில் நீ இல்லை.
உன்னை சுமந்த நெஞ்சுக்குழி
அருகேயுள்ள இதயத்தின் துடிப்பை இரட்டிப்பாக்கி இம்சை செய்து என்னை பலவீனமாக்கி பழுதுபார்க்கிறது!


உன் விரல்கள் என் உள்ளங்கைப்பற்றி  அழுத்தமாய் சொன்ன கவிதைகள்,
அது நம் காதலை உணர்த்திய தருணங்கள்.
என் கோபத்தை நான் சொல்ல – உன்
காதலால் அதை நீ வெல்ல
அந்த நினைவுகள் எனைக் கொல்ல தவிக்கிறேன் என் அன்பை நேரில் சொல்ல…

 
காத்திருந்தேன், காத்திருக்கிறேன், காத்திருப்பேன்…
காத்திருந்த தருணத்திற்கு நீ தந்த காதல் அழகு.
இப்பொழுது காத்திருக்கும் தருணத்திற்கு நீ தரப்போகும் காதல்
எல்லையில்லா காவியமாக தொடர உனக்காக நான் இங்கே  காத்திருக்கிறேன்!… காத்திருப்பேன்!…
என் அன்பு கணவா!….

பொன்மணி தர்மராஜன், BE., , பரவாக்கோட்டை.

(2050 மாசி மாத மின்னிதழிலிருந்து)

Leave a Reply