நீண்ட நெடிய நமது தமிழர் வரலாற்றின் வியக்கவைக்கும் பல விசயங்களை ஆதாரத்துடன், விளக்கங்களுடன் இந்த மாதம் முதல்….
“உலையா உள்ளமோ டுயிர்க்கடன் இறுத்தோர்
தலைதூங்கு நெடுமரந் தாழ்ந்துபுறஞ் சுற்றி
பீடிகை யோங்கிய பெரும்பலி முன்றில்
காடமர் செல்வி கழிபெருங் கோட்டமும்”
– மணிமேகலை
அரிகண்டம் – நவகண்டம் குறித்து இது போன்ற பல பாடல்கள் மணிமேகலை, சிலப்பதிகாரம், கலிங்கத்துப் பரணி போன்ற பல இலக்கியங்களில் கிடைக்கிறது. கடந்த 200 ஆண்டுகள் முன்புவரை இருந்த இந்த மரபிற்கு, 18 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் அரசு தடை விதித்து, உயிரை மாய்த்துக் கொள்ளுதல் தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்து நிறுத்தியது.
அரிகண்டம் – single stroke

“தூங்குத்தலை” எனும் வீரச்சாவு
கொற்றவையை நினைத்து வீரன் அமர்ந்திருக்க, அருகேயுள்ள மூங்கிலை வளைத்து, அதில் அவன்முடி கட்டப்பட்டிருக்கும். அவனுக்கருகேயுள்ள மற்றொருவீரனோ அல்லது அவ்வீரனோ தலையை துண்டிப்பான். உடம்பிலிருந்த தலை அவனுடம்பிலிருந்து தனியாக மேலே நிமிரும். மணிமேகலை, கலிங்கத்துப்பரணி இந்நிகழ்ச்சியினை ஆவணப்படுத்தியுள்ளன.
“உலையா உள்ளமொடு உயிர்க்கடனிறுத்தோர் தலைதூங்கு நெடுமரம்”
“வீங்குதலை நெடுங்கழையின் விசைதொறும்
திசைதொறும் விழித்துநின்று தூங்குதலை”
நவகண்டம் – 9 strokes

நவகண்டத்தில் (தமணி, சிரை போன்ற) உடலின் முக்கிய ரத்தநாளங்களை எட்டு இடங்களில் வெட்டிக் கொண்டு இறுதியாக கழுத்தை அறுத்துக் கொண்டு இறப்பர்.
இந்த நிகழ்வானது ஓரிரு நொடிகளில் நடந்து முடிந்துவிடும்.
ஒரு நல்ல வீரனால் மட்டுமே நவகண்டம் இட இயலும் ஏனெனில் நொடிப்பொழுதில் மற்றும் துல்லியமாக நரம்புகளின் மேல் வாள்வீச மிகவேகமான வாள்வீச்சு வீரனால் மட்டுமே முடியும்.
மற்றபடி வீரரல்லாதோர் குடிமக்கள் அரிகண்டமே இடிருப்பர்…!
தகவல் திருச்சி பார்த்தி
(2050 மாசி மாத மின்னிதழிலிருந்து)