கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கொடுத்த அனைத்து தமிழக மைந்தர்களுக்கும் இது சமர்ப்பணம்.
செல்வத்தை ஈர்க்க என்றாவது ஒருநாள் உங்களிடம் போதுமான செல்வம் இல்லை என்று நினைத்து வருத்தபட்டது உண்டா, அது ஏன் இல்லை என்று ஆராய்ந்து பார்த்து உள்ளீர்களா, என்னை பொறுத்தவரை 100 க்கு 99 சதவீதம் அவ்வாறு நினைக்க வாய்ப்பு இல்லை, ஏனென்றால் அதற்கு போதுமான நேரம் நம்மிடம் இல்லை என்று மேலோட்டமாக நினைத்துக் கொண்டு கிடைப்பதை வைத்து வாழ்க்கையை நகர்த்துகின்றோம்,
உண்மையில் நம் மனம் எதை நோக்கி நேர்மையாக பயணிக்கிறதோ அதை அதன் வழியில் விட்டுவிடுங்கள் அது உங்களுக்கு செல்வத்தையும் வெற்றியையும் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்.
பொதுவாக நமக்கு செல்வம் வேண்டுமென்றால் கடினமாக உழைக்க வேண்டும் என்ற அறிவுரைகளை நாம் கேட்டிருப்போம், அப்படி ஒரு எண்ணம் இருந்தால் அதை தூக்கி எறியுங்கள், அப்படி நீங்கள் சிந்திக்கும் பொழுது நீங்கள் இன்னும் கடினமாக உணரப்படுவீர்கள், செல்வம் சேமிப்பு என்பது அது வெறும் மன நிலை தான், அது நீங்கள் எவ்வாறு சிந்திப்பீர்கள் என்பதை பொறுத்து, நீங்கள் என்ன சிந்திப்பீர்களோ அதுவே நடக்கும்.
செல்வத்தை நம் வசப்பட செய்ய வேண்டுமென்றால் அது குறித்து உங்களுக்கு மகிழ்சியான எண்ணம் மற்றும் உணர்வு இருந்துக் கொண்டே இருக்க வேண்டும், மக்களிடம் செல்வம் இல்லாத போது அவர்களின் சோகமான மனநிலை அவர்களிடம் செல்வத்தை மேலும் வரவிடாமல் செய்கிறது,
எதிர்மறை எண்ணங்கள் செல்வம் உங்களை நோக்கி வருவதை தவிர்க்கின்றன, அதை சரி செய்ய எப்பொழுதும் செல்வம் என்னிடம் நிறைய உள்ளது என்றும் நான் செல்வத்தை நேசிப்பவன் என்று மனதார சொல்லிக்கொண்டே இருங்கள், நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியான உணர்வுடன் இருக்கிறீர்களோ அவ்வளவு செல்வத்தை உங்களிடம் கொண்டுவரும்.
செல்வத்தை தக்கவைக்க
உங்களிடம் இருக்கும் செல்வத்தை தக்க வைக்க உங்களிடம் இருக்கும் செல்வத்தை பிறருக்கு கொடுத்து உதவுங்கள், அந்த பெருந்தன்மை உங்களுக்கு மகிழ்ச்சியான உணர்வை தருவது மட்டும் இல்லாமல் உங்களுடைய செல்வத்தை தக்க வைக்கிறது, நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு செல்வமும் உங்களுக்கு தெரியாமல் உங்களிடம் இரட்டிப்பாக கொண்டு வந்து சேர்க்கும். சற்று நினைத்து பார்த்தால் உலகிலுள்ள செல்வந்தர்கள் அனைவரும் நன்கொடையாளர்களாக இருப்பார்கள்.
உங்களிடம் போதுமான செல்வம் இல்லை என்று நினைக்க துவங்கும் முன் கொடுக்க துவங்குங்கள், அப்படி கொடுக்கும் பொழுது செல்வத்தின் ஈர்ப்பு விசை இன்னும் அதிகப்படியான செல்வத்தையும் மகிழ்ச்சியான சூழ்நிலையையும் உருவாக்கும்,
இன்னும் எளிமையாக சொல்ல ஆசை படுகிறேன்
.
.
.
தலைப்பை படியுங்கள்
பேரன்புடன் பிரகதீஸ்வரன்.பா
(2050 மாசி மாத மின்னிதழிலிருந்து)