திக்கி திணறி தான் போகின்றேன்!
நீ என்னை வருடும் போது..!
திசை எங்கும் வீசும் நீ,
என் மேனிபடரும் போது
திக்கி திணறி தான் போகின்றேன்!
எப்பொழுதும் உன் அரவணைப்பு கிடைப்பதில்லை,
முக்கதிர் விளையும் இக்கார்காலம் தவிர!
அள்ளி அணைத்திட துடித்தேன்,
உன்னை ஆகபெரும் உவகையுடன்!
அங்கம் எங்கும் படர்ந்தாய்,
என் தீரா ஆவல் கண்டு!
என்னை மறந்தேன்,
கவலை மறந்தேன்,
புறத்தை மறந்தேன்,
அகிலதையும் மறந்தேன்!
புதிதாய் இப்பூமியில் பூத்ததாய் உணர்ந்தேன்,
புத்துணர்ச்சி பெற்றேன்!
கார்கால தென்றலே,
நீ என்னை தழுவும் போது
திக்கி திணறி தான் போகின்றேன்!
– சதீஷ்
விருதை
(2051 ஆடி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …)
படஉதவி: