பாரம்பரிய நெற்களை மீட்பது ஒருபுறம் இருந்தாலும் அதை சரியாக மக்களிடம் கொண்டு சேர்த்தால் மட்டுமே அதை உற்பத்தி செய்பவர்கள் தொடர்ந்து தொய்வில்லாமல் பணி செய்வார்கள். அவர்களும் வாழ்வு பெறுவார்கள்.
இதை மெய்ப்பிக்கும் வகையில் மன்னார்குடியில் கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பாக இயற்கை உணவுகளை வழங்கி வரும் உழவன் சிறுதானிய அங்காடி தற்பொழுது மதிய உணவாக தூயமல்லி அரிசி சோறை அறிமுகம் செய்துள்ளது.
இதன் ஆரம்ப விலை ரூ.70/- என்றும், சிறப்பு சாப்பாட்டிற்கு ரூ.100/- என்றும் விலை நிர்ணயித்து உள்ளார்கள். அதே நேரம் சாப்பாட்டை வாங்கி செல்வதாக இருந்தால் கூடுதலாக ரூ.10/- என்றும் அதன் உரிமையாளர் அருண்ரவி அவர்கள் நம் திறவுகோல் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். அதன் கூடுதல் விவரங்களை நீங்கள் கீழே காணலாம்.
உழவன் வீட்டு சாப்பாடு, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய நெல் வகையிலிருந்து பெறப்பட்ட தூயமல்லி அரிசி சோறுடன்,
- கத்தரி முருங்கை சாம்பார்
- மணத்தக்காளி சுண்டவத்தல் குழம்பு
- தக்காளி மிளகு ரசம்
- நீர்மோர்
- வெண்டைக்காய் புளிக்கறி
- புடலங்காய் கூட்டு
- கீரை பொரியல்
- இஞ்சி துவையல்
- பச்சைப் பயிர் பாயசம்
- ஊறுகாய்
- அப்பளம்
- மோர் மிளகாய்
என ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான துவையல், ரசம் மற்றும் நாட்டு காய்கறிகளுடனும்
சிறப்பு சாப்பாட்டில் (Special Meals)
- பச்சைப்பயறு பாயாசம்
- வடை
- நெய் மற்றும் பருப்பு பொடி
என தலை வாழை இலையில் உணவருந்திட உழவன் சிறுதானிய அங்காடிக்கு வருகை தாருங்கள்.
மேலதிக விவரங்களுக்கு
உழவன் சிறுதானிய அங்காடி,
94, 95, காந்தி சாலை,
மன்னார்குடி – 614001
அல்லது அழையுங்கள் 9894543216 | 7373167112