கொரோனா பாதிப்பால் உலகெங்கும் லட்சக்கணக்கான மக்கள் இறந்து வரும் நிலையில், பல நாடுகளும் தங்கள் மருத்துவ குழுக்களின் உதவியுடன் தொடர் ஆய்வுகளில் இறங்கியுள்ளது. சில நாடுகள் அதற்கான மருந்தை விரைவில் வெளியிட உள்ளோம் என்று கூறியும் வருகிறது.
ஆனால் ரசியாவில் உள்ள கமேலேயா என்ற நிறுவனம் இதற்கான தடுப்பூசி மருந்தை தயாரித்துள்ளது. இம்மாதம் ஆகஸ்ட் 12ஆம் தேதி இது பதிவு செய்யப்படும் என்றும், அக்டோபர் மாதம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் கூறியுள்ளார்கள்.
தடுப்பு மருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பதாகவும், தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனை நிலையில் இருப்பதாகவும் அந்நாட்டு சுகாதார துறை அமைச்சர் புரஸ்கோ தெரிவித்துள்ளார்.
படஉதவி: @parulava