Home>>அரசியல்>>புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப்பெற வலியுறுத்தி கண்டனம்
அரசியல்கல்விசெய்திகள்தமிழ்நாடு

புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப்பெற வலியுறுத்தி கண்டனம்

இந்திய ஒன்றிய அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப்பெற வலியுறுத்தி ஒன்றியம் முழுமைக்கும் நாம் தமிழர் மாணவர் பாசறை முன்னெடுக்கும் கண்டனப் பதாகை ஏந்தும் போராட்டத்தை, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

இன்றைய கண்டனப் பதாகை ஏந்தும் போராட்டத்தில் #TNRejectsNEP என்ற சொல்லுடன் பதாகைகள் இடம்பெற்றது.

மற்றும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் சீமான் அவர்கள் இதில் சீர்திருத்தங்கள் செய்வது கூட வேண்டாம், இந்த புதிய கல்விக் கொள்கையை முற்றிலுமாக எதிர்க்கிறோம் என்றார். மற்றும் நாங்கள் ஏன் 3வது மொழியான கிந்தி, சமசுகிருதம் போன்ற மொழிகளை கற்க வேண்டும் என்பது போன்ற கருத்துகளை முன்வைத்தார். குறிப்பாக சமசுகிருதம் படித்து எந்த கோவிலுக்கு மணியாட்ட அனுமதிக்க போகிறார்கள் இங்கு, இந்த சமசுகிருதம் படித்து யாரிடம் பேச போகிறோம் என்ற கேள்வியையும் முன் வைத்தார்.

Leave a Reply