Home>>அரசியல்>>நாட்டுக்கோழி குழம்பு!! பிராய்லர் கோழி!! காங்கேயம் காளை!!
அரசியல்தமிழ்நாடு

நாட்டுக்கோழி குழம்பு!! பிராய்லர் கோழி!! காங்கேயம் காளை!!

இன்று சட்டசபையில் கால்நடைத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் மஜக பொதுசெயலாளர் மற்றும் நாகப்பட்டின சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று பேசினார்.

அப்போது நம் எல்லோருடைய அன்றாட வாழ்விலும் கோழிக்கறி உணவு கலந்துள்ளது என்றதும், அவை உறுப்பினர்கள் அவரை புன்னகையோடு பார்த்தனர். உடனே அவர் உறுப்பினர்களின் புன்னகையே கோழிக்கறியின் முக்கியத்துவத்தை குறிப்பாக உணர்த்துகிறது என்றதும், துணை சபாநாயகர் உட்பட அனைவரும் சிரித்துவிட்டனர்.

பிராய்லர் கோழி ஆபத்து?

அப்படிப்பட்ட கோழிகறியில், பிராய்லர் கோழி குறித்து பத்திரிக்கைகளிலும்,சமூக இணைய தளங்களிலும் வரும் செய்திகள் கவலையளிகின்றன. பிராய்லர் கோழிகளை உண்பதால் நோய்கள் வருவதாக கூறப்படுகிறது. எனவே நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். பிராய்லர் கோழி மீது அவர் வைத்த விமர்சனத்தை பலரும் ஏற்கும் வண்ணம் தலையாட்டினர்.

உடனே கால்நடைத்துறை அமைச்சர் கிருஷ்ணா கிருஷ்ணா ரெட்டி எழுந்து பதிலளித்தார். ‘பிராய்லர் கோழி உணவுகள் தீங்கானவை என்பது குறித்து அறிவியல் பூர்வமாக எதுவும் உறுதி செய்யப்படவில்லை’ மேலும் நாட்டுக்கோழி வளர்ப்பை அதிகரிக்கும் வகையில் பண்ணைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

குழம்பு கிடைக்குமா?

இதை தொடர்ந்து பேசிய தமிமுன் அன்சாரி “நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பது நல்ல விசயம்.அதற்கு ஆதரவு கொடுக்கும் வகையில் அவை உறுப்பினர்கள் அனைவருக்கும் நாட்டுக்கோழி விருந்து வைத்தால் நன்றாக இருக்கும்” என்றதும் எல்லோரும் வாய்விட்டுச் சிரித்தனர்.

காங்கேயம் காளையா? உம்பளச்சேரி காளையா?

தொடர்ந்து பேசிய தமிமுன் அன்சாரி காங்கேயம் காளை தொடர்பாக பேசினார். அப்போது காங்கேயம் தொகுதியிலிருந்து வெற்றிபெற்று வந்து தனக்கு அருகில் இருக்கும் கொங்கு இளைஞர் பேரவை தலைவர், தனியரசு அவர்களை வை காட்டி “எனக்கு அருகில் காங்கேயத்திலிருந்து இங்கு ஒரு அரசியல் காளை வந்திருக்கிறது” என்றதும் மீண்டும் சிரிப்பொலி எழுந்தது.

அந்த காளை,இன்று காலை என்னிடம் ஒரு செய்தி சொன்னது, என்றதும் மீண்டும் சிரிப்பொலி எழுந்தது.

அதாவது,தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்றான காங்கேயம் காளை வளர்ப்பை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும் என்றார். அப்போது கொங்கு மண்டலத்திலிருந்து வந்திருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அதை ஏற்கும் வண்ணம் தலையாட்டினார்.

அப்போது சிரித்தபடியே எழுந்த கைத்தறிதுறை அமைச்சர் O.S.மணியன், ‘நமது உறுப்பினர் (தமிமுன் அன்சாரி) காங்கேயம் காளையின் சிறப்புக்களை பேசினார். அதுபோல உம்பளச்சேரி காளைதான சிறப்பானது’ என என பேசினார். அப்போது அவை உறுப்பினர்கள் இது என்ன காளை சண்டை? என ரசித்தனர்.

கோரிக்கைள்!!

அதன்பிறகு தொடர்ந்து பேசிய தமிமுன் அன்சாரி,கால்நடை பராமரிப்பு துறையில் களப்பணி நிலையங்களான கால்நடை மருத்துவ கிளை நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். 3 ஆயிரம் கால்நடைகள் அல்லது 3 கீ.மி சுற்றளவுக்கு ஆயிரம் கால்நடை மருத்துவ கிளை நிலையங்கள் இருக்க வேண்டிய நிலையில் 875 கிளை நிலையங்கள் மட்டுமே உள்ளன. குறைந்தபட்சம் ஊராட்சி ஓன்றியத்திற்கு ஓரு கிளை நிலையமாவது உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

அதுபோன்று இத்துறையில் பணியிடங்களை நிரப்புதல்,பதவி உயர்வு வாய்ப்புகளை அதிகரித்தல், கால்நடை மருத்துவமணைகளில் மருத்துவ மேற்பார்வையாளர் பணியிடங்களை உருவாக்குதல், கால்நடை ஆய்வாளர் பயிற்சியை Diploma Course ஆக மாற்றுதல், உள்ளிட்ட தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம் அவரிடம் கேட்டுக்கொண்ட கோரிக்கைகளை வரிசைபடுத்தி பேசினார். அதற்கு அமைச்சர் பதில்களையும், விளக்கங்களையும் வழங்கினார்.

கலகலப்பானது பேரவை!!

கடந்த 4,5 நாட்களாக தமிழக சட்டபேரவை சற்று பதட்டமாகவே இருந்தது. தமிமுன் அன்சாரி அவர்கள் அவையின் சூட்டை தணிக்கும் வகையில் இயற்கை வளம், பிராய்லர் கோழி ஆபத்து, காங்கேயம் காளை வளர்ப்பு ஆகிய மக்கள் எதிர்பார்த்த கோரிக்கைகளை சாதுர்யமாகவும், இலக்கியமாகவும், நகைச்சுவையாகவும் முன்வைத்து சபை விவாதங்களில் முத்திரை பதிக்கும், கவன ஈர்ப்பு மிக்க உறுப்பினராக தன்னை நிலை நிறுத்தியுள்ளார்.

சபை முடிந்ததும் அமைச்சர்கள், உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், ஊழியர்கள் என அனைவரும்
அவரை சந்தித்து கைகுலுக்கி “சபையில் கலகலப்பாக விவாத்தை கொண்டு போனிங்க” என்று பாராட்டினர்.


தகவல்: நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்

Leave a Reply