சோழசேனையின் அடுத்த கட்ட நகர்வாக தமிழகத்தின் தொன்மம், தமிழர் வரலாற்றின் வேர் என போற்றப்படும் மதுரை மாநகரில், பாண்டியர்களின் வரலாற்றினை போற்றிடும் வகையில், புதியதாக கட்டப்பட்டு வரும் மதுரை புதிய பேருந்து நிலையத்திற்கு இரட்டைகயல் அடையாளத்தை நுழைவாயிலில் வைத்து, “அருள்மிகு மீனாட்சியம்மன் “அல்லது “மாறவர்மன் சுந்தரபாண்டியன்” பெயரை வைக்ககோருவோம்.
இது குறித்த கோரிக்கையை அளிக்க, மண்ணின் மைந்தர் துணை முதல்வரை சந்திக்கவும் நேரம் கேட்டிருக்கிறோம் என அதன் ஒருங்கிணைப்பாளர் திரு.அருமொழி அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
நமது மண், நமது வரலாறு… என்ற ஆழமாக வரியுடன் மக்களிடமும் ஆட்சியாளர்களிடம் இந்த கோரிக்கையை கொண்டு செல்லும் பணியிலும் சோழசேனை அணி தற்பொழுது களத்தில் இறங்கியுள்ளது தமிழ் ஆர்வலர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முகநூல் முகவரி: https://www.facebook.com/photo?fbid=3649402561787585&set=a.510014205726452