Home>>தமிழ்நாடு>>நிவர் புயல் தொடர்பான செய்தி துளிகள்
தமிழ்நாடு சட்டமன்றம்
தமிழ்நாடுவானிலை

நிவர் புயல் தொடர்பான செய்தி துளிகள்

நிவர் புயல் காரணமாக நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை.


நிவர் புயல் காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து.

*இரு மார்கங்களிலும் நாளை 1 நாள் ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு


தீவிர புயலாக நிவர் கரையை கடக்கும் போது 145 கி.மீ. வேகத்தில் சூறாவளி புயல் காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது!

– எஸ்.பாலச்சந்திரன், இந்திய வானிலைத் துறையின் தென் மண்டல தலைவர்


நிவர் புயல் தொடர்பாக முதல்வர் பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை

நிவர் புயல் தொடர்பாக முதல்வர் பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தி உள்ளார். நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கேட்டறிந்து, தமிழகத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.


நிவர் புயல் கடந்துவிட்டது என அறிவிக்கும் வரை மக்கள் வெளியே வர வேண்டாம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

நிவர் புயல் கடந்துவிட்டது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை மக்கள் வெளியே வர வேண்டாம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுறுத்தியுள்ளார். புயல் குறித்து பதற்றமடைய வேண்டாம்; எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.


22 அடியை எட்டினால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்படும்
– காஞ்சிபுரம் ஆட்சியர் மகேஸ்வரி.


நிவர் புயல் முன்னெச்சரிக்கை:
புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு மறு உத்தரவு வரை விடுமுறை அறிவிப்பு

நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி,காரைக்காலில் 9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்ட நிலையில் புயல் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


நிவர் புயல் தொடர்ந்து ஒரே இடத்தில் 3 மணி நேரமாக நீடிக்கிறது. நீடித்த இடத்திலிருந்து எந்த தமிழக பகுதியை நோக்கி செல்கிறதே பொறுத்தே கடக்கும் பகுதி அமையும். நிவர் நாளை இரவே கடக்க வாய்ப்பு.

தற்போதைய நிலவரப்படி வேதாரண்யம் முதல் மாமல்லபுரம் வரை கடற்பகுதியோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

நாகை காரைக்கால், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவாரூர், மயிலாடுதுறை, சென்னை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் (80 − 110 கிமீ) வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்ட பகுதியில் காற்றின் வேகம் 60 கிமீ உடன் கன மழை பெய்யும். உள்மாவட்டங்கள் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை மழை பெய்யும். இது தற்போதைய நிலை புயல் திசை மாறினால் காற்றின் வேகம் மாறும்.


காய்கறி மற்றும் தார்பாய்கள் விலை இருமடங்காக உயர்வு. திடீரென அதிக அளவில் மக்கள் மெழுகுவர்த்தி வாங்குவதால் அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது தட்டுபாடு.


மன்னார்குடியில், பயிர் காப்பீடு விண்ணப்பிக்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அதே நேரம் போதிய வசதிகள் இல்லையென்றும் மக்கள் தெரிவித்து வருகிறார்கள்.


செய்தி சேகரிப்பு:
இராசசேகரன், மன்னார்குடி.
ஆனந்த், முத்துப்பேட்டை.
பிரசன்னா, மன்னார்குடி.

Leave a Reply