Home>>கல்வி>>தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருதினை வென்ற கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி
கல்விசெய்திகள்தமிழ்நாடுமன்னார்குடி

தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருதினை வென்ற கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி

அன்பான ஆசிரிய சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம்..

2018 – 2019 ஆம் கல்வி ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருதினை நம் மன்னார்குடி, கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி பெற்றிருக்கிறது என்பதை மகிழ்வுடன் பகிர்கின்றேன்.

இவ்விருதினைப் பெற இப்பள்ளி தகுதியானது என்ற நம்பிக்கை வைத்து பரிந்துரை செய்த திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மன்னார்குடி மாவட்டக் கல்வி அலுவலர், வட்டாரக் கல்விஅலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர், ஆசிரியப் பயிற்றுநர்கள் அனைவருக்கும் முதற்கண் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

பதினான்கு ஆண்டு காலமாக என்னுடன் இணைந்து, இன்முகத்துடன் பணியாற்றி வருகின்ற அனைத்து ஆசிரிய, ஆசிரியைகளுக்கும், பணி மாறுதல் பெற்று பல்வேறு பள்ளிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் ஓய்வு பெற்ற நல்லாசிரியர் திருமதி. வி.மீரா மணியன் உள்ளிட்ட அனைத்து மூத்த ஆசிரியர்களுக்கும் உளப்பூர்வமான அன்பினையும், நன்றியினையும் உரித்தாக்கி மகிழ்கின்றேன்.

நம் பள்ளியின் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் பங்கெடுத்துக் கொள்கின்ற பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர்கள், பொதுமக்கள், அரிமா, ரோட்டரி,மிட்டவுன் ரோட்டரி, JCI, வளைகரங்கள், மன்னையின் மைந்தர்கள் அமைப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினை சமர்ப்பித்துக் கொள்கின்றேன்.

மேலும் இவ்விருதினை நம் பள்ளிக்கான விருதாக மட்டும் எண்ணாமல் மன்னார்குடி ஒன்றியத்தில் பல மணி நேரம் பயணம் செய்து, ஊதியத்திற்காக மட்டுமல்லாமல் உளப்பூர்வமாக, உண்மையாக, உழைத்துக் கொண்டிருக்கின்ற அத்தனை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மற்றும் ஆசிரியர்களுக்கான விருதாகவும் எண்ணுவதால் இந்த மதிப்பிற்குரிய விருதினை அவர்களுடன், பங்கிட்டுக் கொள்வதிலும், பகிர்ந்து கொள்வதிலும் பெருமகிழ்வு கொள்கின்றேன்.

எனவே இது நமக்கான விருது. நம் மன்னை ஒன்றியத்திற்கான விருது. இந்த இனிய தருணத்தை இணைந்து கொண்டாடுவோம்.


பேரன்புடன்…
தலைமை ஆசிரியர்,
மற்றும் அனைத்து ஆசிரியர்கள்,
நநிப,

கோபாலசமுத்திரம்
மன்னார்குடி.
திருவாரூர் மாவட்டம்.
நாள்: 31.12.2020

Leave a Reply