எஸ்.பி அரவிந்தன் அவர்களை பாராட்டியே ஆகவேண்டும்.பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போது தற்காப்பு காரணமாக பாதிப்புக்குள்ளான பெண் கொலை செய்ததால் சட்டப்பிரிவு 106 ன் படி எஸ்.பி அரவிந்தன் விடுதலை செய்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பாலியல் கொடுமை செய்ய முயன்றவரை கத்தியால் குத்திக் கொன்ற இளம்பெண்ணை IPC 106-ன் படி தற்காப்புக்காக செய்த கொலை என்ற அடிப்படையில் அவரை கைது செய்யும் நடவடிக்கை கைவிடப்பட்டு விடுதலை செய்ய நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள ஒரக்காடு அல்லிமேடு பகுதியில் கடந்த ஜனவரி இரண்டாம் தேதி இரவு கௌதமி என்ற 19 வயது பெண்ணை கத்தி முனையில் இளைஞர் ஒருவர் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இந்த முயற்சியின் போது இளைஞரை அந்த பெண் கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த இளைஞரின் பெயர் அஜித் குமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போது தற்காப்பு காரணமாக அந்த பெண் கொலை செய்ததால் சட்டப்பிரிவு 106 ன் படி எஸ்.பி அரவிந்தன் விடுதலை செய்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது. இந்த தகவல் குறித்த எஸ்.பி அரவிந்தனின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்த பலர் தமிழக அரசையும் குறிப்பாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் ஆகியோரை பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.