Home>>தமிழ்நாடு>>தமிழ் முருகன் சிலை தமிழர் வழிபாட்டுக்காக நிறுவப்பட்டது.
தமிழ்நாடுமன்னார்குடிவரலாறு

தமிழ் முருகன் சிலை தமிழர் வழிபாட்டுக்காக நிறுவப்பட்டது.

இன்று (28-01-2021) தைப்பூச நன்னாளில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகரில் உள்ள இருதய மருத்துவர் ஐயா பாரதிச்செல்வன் அவர்கள் மருத்துவமனையில் தமிழ் முருகன் சிலை தமிழர் வழிபாட்டுக்காக நிறுவப்பட்டது.

தமிழ் முருகன் – முருகன் என்றால் தமிழ்க் கடவுள். உலகத் தமிழினத்தின் பெரிய கடவுள்.

காலத்துக்கு முந்திய வரலாற்று முருகனுக்கு தமிழ் இன அடையாளம் மட்டுமே உள்ளது. மத அடையாளம் இல்லை.

முருகன் கடல் கொண்ட குமரிக்கண்டத்தின் மலையும் கடலும் சார்ந்த பகுதியை ஆண்ட மன்னன். யானையின் மீதும் நாவாயின் மீதும் சென்று போரிட்ட மன்னன். நடுகல் வழிபாட்டு மரபில் தமிழர்களால் அவன் வணங்கப்பட்டான்.

தமிழ் முருகன் சிலை - மன்னார்குடிமுருகனின் தாய் கொற்றவை!

குமரிக்கண்டம் ஆழிப்பேரலையால் கடலுள் மூழ்கியபோது நாம் பெரும் தொகையிலான நமது மூதாதையர்களை இழந்தோம். அவர்களே தென்புலத்தார் என்று வணங்கப்படுகிறார்கள். அவர்களின் நினைவுகளோடு தென்புலத்திலிருந்து (குமரிக் கண்டத்திலிருந்து) இடம் பெயர்ந்தோரே நாம்.

இடம் பெயர்ந்த நாம் குடிபுகுந்த நிலத்தில் எங்கே மலையைக் கண்டாலும் அங்கே முருகனுக்கு கோயில் கட்டினோம்.

சங்க இலக்கியங்களை ஆய்வு செய்து பாவலர் அறிவுமதி கண்டறிந்த உண்மைகளே இவை.


செய்தி உதவி:
செந்தில் பக்கிரிசாமி, மன்னார்குடி.

Leave a Reply