Home>>உலகம்>>இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் – பிரிட்டன் அரசிடம் வேண்டுகோள் விடுத்துஅம்பிகா செல்வகுமார் சாகும் வரை உணவு தவிர்ப்புப் போராட்டம்
உலகம்செய்திகள்

இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் – பிரிட்டன் அரசிடம் வேண்டுகோள் விடுத்துஅம்பிகா செல்வகுமார் சாகும் வரை உணவு தவிர்ப்புப் போராட்டம்

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்தவேண்டும் என்பது உட்பட மூன்று கோரிக்கைகளைமுன்வைத்து லண்டனில் தமிழ் பெண்ணொருவர் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை பிப்ரவரி 27 ,2021 ஆம் திகதி ஆரம்பித்துள்ளார் .

ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் பிரிட்டன் சமர்பித்துள்ள தீர்மானத்தில்

  • இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பரிந்துரைத்தல்
  • சர்வதேச சுயாதீன புலனாய்வுப் பொறிமுறையை உருவாக்குதல்
  • இலங்கைக்கான ஐ.நா. நிரந்தர சிறப்புப் பிரதிநிதியை நியமித்தல்

 

போன்றவற்றை உள்ளடக்க வேண்டும் என பிரிட்டன் அரசிடம் வேண்டுகோள் விடுத்து சாகும் வரை உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றை அம்பிகா செல்வகுமார்  ஆரம்பித்துள்ளார்.

அம்பிகா செல்வகுமார்சர்வதேச இனப்படுகொலையைத் தடுத்தல் மற்றும் வழக்காடு மையத்தின் பணிப்பாளராக அம்பிகை பணியாற்றுகின்றார். அத்துடன் தொடர்ச்சியாக தமிழர்களின் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தும் நோக்கத்துடன் செயற்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும், உலகத்தமிழர்கள் அனைவரும் வேற்றுமைகளின்றி ஆதரவு அளிக்க வேண்டு என அம்பிகை செல்வகுமார் கோரிக்கை விடுத்திருந்தார்.

அம்பிகை செல்வகுமார், சாகும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை லண்டனில் பிப்ரவரி 27 ,2021 ஆம் திகதி ஆரம்பித்த நிலையில் அவருக்கு வலுச் சேர்க்கும் வகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் நல்லூரில் உணவுதவிர்ப்புப் பிப்ரவரி 28 ,2021 ஆம் திகதி போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பல்கலைக்கழக  மாணவர்கள் இருவருடன் வேலன் சுவாமிகள், அருட்தந்தையர்கள் இருவர் என ஐந்து பேர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடதக்கது.இந்நிலையிலேயே இவரது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ். நல்லூர் பகுதியில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

லண்டன் நகரின் புற நகர பகுதிகளான கொவண்றி, மற்றும் ரக்பி பகுதி மக்கள் இணைந்து சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தினை நடாத்தி வரும் அம்பிகா செல்வகுமார் அவர்களுக்க்கான ஆதரவினை நல்கும் வண்ணம் மார்ச் 02,2021 ஆம் திகதி வாகன பேரணியாக அவர் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் அரங்கிற்கு வருகை தந்தனர்.

அம்பிகா செல்வகுமார் அவர்களின் 9 ம் நாள் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக டொரோண்டோவில் ஆர்ப்பாட்ட பேரணி மார்ச் 7,2021 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வரும் மார்ச் 9,2021 ஆம் திகதி கியூபெக் நகரில் அமைந்துள்ள பாராளுமன்றத்தின் முன் போராட்டம் நடத்த உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லெப்.கேணல் தியாகி திலீபன் உண்ணாநோன்பிருந்த நல்லூரின் வீதியில் பல்கலைகழக மாணவர்களால் தொடங்கப்படட சுழற்சி முறையிலான உண்ணாநிலைப் போராட்டம், லெப்.கேணல் தியாகி திலீபனை முன்தொழுது பிரித்தானியாவில் திருமதி.அம்பிகை செல்வகுமார் அவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்டம், தென்தமிழீழத்தில் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக ‘பொத்துவில் முதல் பொதலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் தொடங்கியுள்ள சுழற்சி முறையிலான உண்ணாநிலைப் போராட்டம் ஆகியன தமிழர் தேசத்தின் நீதிக்கான வேட்கையினை மீண்டும் மீண்டும் பன்னாட்டு சமூகத்துக்கு பறைசாற்றி வருகின்றன.
குறிப்பாக பிரித்தானியாவில் மனித உரிமைகளுக்கான போராடும் பாரப்பரியத்தையும், இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிவேண்டி அயராது பாடுபடும் ICCPG அமைப்பின் செயலதிபாராகவும் உள்ள திருமதி.அம்பிகை செல்வகுமார் அவர்களது சாகும் வரையிலான உணவுத்தவிப்பு போராட்டத்தின் ஆத்மதுணிச்சல் போற்றுதலுக்குரியது.
ஐ.நாவின் தற்போதைய ஆணையாளர், முன்னாள் ஆணையளர்கள், ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள், தமிழினத்தின் மீது நடந்த போர்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலைக்கு சிறிலங்காவை பொறுப்புக்கூறவைப்பதற்கு, சிறிலங்காவை அனைத்துலக நீதிமன்றில் பாரப்படுத்துமாறு தமது அறிக்கையில் கோரியிருந்தனர்.
ஆயினும் சிறிலங்கா தொடர்பாக முகன்மை குழு நாடுகளால் ஐ.நாவில் சமர்ப்பிக்கப்பட்ட ஆரம்ப (zero draft resolution) பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு பூச்சிய (zero) வரைவு பூச்சிய நீதி மற்றும் பூச்சிய பொறுப்புக்கூறலையே வெளிப்படுத்தியுள்ளது என்ற தார்மீக கோபத்தின் வெளிப்பாடாகவே இந்த அறவழி அகிம்சைப் போராட்டங்கள் அமைந்துள்ளன. இவைகள் சர்வதேச சமூகத்தினை நமது பக்கம் திரும்பிப்பார்க்கும் வகையில் மக்கள் போராட்டத்துக்கு வழிகோலும் வகையில் அமையும் என்ற நம்பிக்கையோடு நாம் அனைவரும் தோழமையோடு ஒன்றுபட்டு நீதிக்கும், அரசியல் இறைமைக்குமாய் போராடுவோம்.
செய்தி சேகரிப்பு
இளவரசி இளங்கோவன் , கனடா

Leave a Reply