அடுத்த மாதம் (06/04/2021) நடைப்பெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளை அறிவிப்பதும், வேட்பாளர்களை அறிவிப்பதுமாக உள்ளது.
இதற்கிடையில் கடந்த ஞாயிறு (07/03/2021) அன்று நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் சென்னையில் நடைப்பெற்றது. அதில் வேட்பாளர்கள் அறிவிப்பின் பல முன்னுதாரணங்களை உருவாக்கினார்கள் என்று சொல்லும் வகையில் இருந்தது அந்த அறிவிப்பு. குறிப்பாக சமூக நீதி, இடஒதுக்கீடு, பெண் சுதந்திரம் என பேசும் கட்சிகளே செய்ய தயங்கும் பலவற்றை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் செயல்படுத்தியுள்ளார் என்றே கூற வேண்டும்.
கீழ்க்கண்ட வகையில் தன்னுடைய கட்சி வேட்பாளர்களை அறிவித்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
234 வேட்பாளர்களில்
117 ஆண்கள்
117 பெண்கள்
மேலும்
6 மருத்துவர்கள்
5 முனைவர்கள்
8 ஆய்வியல் நிறைஞர்கள்
22 பொறியாளர்கள்
20 வழக்கறிஞர்கள்
36 முதுகலை பட்டதாரிகள்
58 இளங்கலை பட்டதாரிகள்
23 பட்டயப்படிப்பு பட்டதாரிகள்
மேலும்
13 இசுலாமியர்கள் (9 பெண்கள்)
21 கிறிசுதுவர்கள் (6 பெண்கள்)
12 பொது தொகுதியில் ஆதி தெலுகு நபர்
16 மாற்றுமொழியினர்
7 மீனவர்கள்
3 அருந்ததிய பெண்கள்
1 வண்ணார்
1 குயவர்
1 குறவர்
1 மருத்துவர்
1 பண்டாரம்
நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களும் குற்றப் பிண்ணனி இல்லாதவர்கள் என்பது தமிழக அரசியலில் புதுநம்பிக்கையை விதைத்துள்ளது என்றே கூறலாம். நாம் தமிழர் கட்சி எப்பொழுதும் சொல்வது “மாற்றம் என்பது சொல்லல்ல செயல்” என்று. அதை நிரூபிக்கும் வண்ணம் இந்த வேட்பாளர் அறிவிப்பு கூட்டம் இருந்தது என்றே சொல்லலாம்.
இதன் தொடர்ச்சியாக மக்கள் மத்தியிலும், குறிப்பாக பெண்கள் மத்தியில் இது பெரும் பேசுப் பொருளாகவும் மாறியுள்ளது. கண்டிப்பாக நாம் தமிழர் கட்சியினருக்கு வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் கடந்த முறைப்பெற்ற வாக்குகளை விட இம்முறை அதிக வாக்குகள் பெற இதுப்போன்ற அவர்களின் அறிவிப்புகள் பெரிதும் உதவும்.
இறுதியாக சொல்ல வேண்டும் என்றால் தற்போதைய சூழலில் சம நீதி, சமூக நீதி, பெண் விடுதலை, இளையோர்களுக்கான வாய்ப்பு, படித்தவர்களுக்கான வாய்ப்பு, மதச்சார்பின்மை, தமிழ்மொழி குடும்ப சிறுபான்மை மொழியினத்தவர்களுக்கான வாய்ப்பு என பலவற்றை வலுப்படுத்தும் வகையிலே இது உள்ளது.
—
செய்தி உதவி:
செந்தில் பக்கிரிசாமி,
மன்னார்குடி.