Skip to content
Wednesday, May 14
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு
திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
செய்திகள்
  • மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்.
  • பெண்கள் குறித்த அமைச்சர் திரு. பொன்முடி அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
  • புரசைவாக்கம், திடீர்நகர் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை ஓராண்டிற்குள்ளாவது நிறைவேற்ற வேண்டும்!
  • தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி அமைப்புச்சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்து முதல்வர் சிந்திக்க வேண்டும்.
  • தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவர் ஐயா சொல்லின் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் மறைவு
Home>>செய்திகள்>>தமிழ் மாமன்னன் இராசேந்திரசோழன் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்.
செய்திகள்தமிழ்நாடுவரலாறு

தமிழ் மாமன்னன் இராசேந்திரசோழன் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்.

adminJuly 16, 2021 471 Views0

கங்கையும் கடாரமும் கொண்டு சிங்காதனத்திருந்த செம்பியர்கோன்

தமிழ் மாமன்னன் இராசேந்திரசோழன் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்: தமிழக முதல்வருக்குக் கோரிக்கை!

‘புதுச்சேரி வரலாற்றுப் பேரவை’ சார்பில் இன்று (15.07.2021) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனு:

‘புதுச்சேரி வரலாற்றுப் பேரவை’ சார்பில் இக்கோரிக்கை மனுவினைத் தங்களின் மேலான பார்வைக்கும் உரிய நடவடிக்கைக்கும் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழ் மாமன்னன் இராசேந்திரசோழன் ஆடித் திங்கள் திருவாதிரையில் பிறந்தான் என்பதைக் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள், தொல்லியல் அறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் சான்றுகளுடன் உறுதி செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இராசேந்திரசோழன் ஆளுகைக்குட்பட்ட சோழப் பேரரசின் தலைநகரமாக விளங்கிய கங்கைகொண்ட சோழபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட சிற்றூர்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து, சென்ற 2014ஆம் ஆண்டு இராசேந்திரசோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடினார்கள். ஊர்கூடி தேர் இழுப்பது போல் ஊர்கள் பலவற்றின் மக்கள் ஒன்றுகூடி மாமன்னன் இராசேந்திரசோழன் பெருமைகளை எடுத்துக்கூரும் வகையில் மாபெரும் விழா எடுத்து தமிழினத்திற்குப் பெருமை சேர்த்தனர்.

தற்போது எதிர்வரும் 05.08.2021 நாளன்று, ஆடித் திங்கள் திருவாதிரையில் மாமன்னன் இராசேந்திரசோழனின் பிறந்த நாள் வருகிறது. தொல்லியல், வரலாற்று உணர்வுகளை மக்களிடத்தில் குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் வளர்க்கவும் தமிழக அரசு சார்பில் “மாமன்னன் இராசேந்திரசோழனின் பிறந்த நாள் விழா” மிகச் சிறப்பாக நடத்த வேண்டுமென கங்கைகொண்டசோழபுரம் மற்றும் சுற்றியுள்ள சிற்றூர்புற மக்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ள செய்தி அறிந்தோம்.

முடிகொண்டான், கங்கைகொண்டான், கடாரங்கொண்டான் போன்ற எண்ணற்ற விருதுகளைப் பெற்ற இராசேந்திரசோழனின் பெருமைகளை உலகறியும். கப்பற்படைக் கட்டி, கடல் கடந்து சென்று கடாரம் வென்றது தமிழனுக்கு ஆகச் சிறந்த வரலாற்றுப் பெருமையாகும். அறிவுக்கூர்மையுடன் ஆட்சிப் புரிந்த மாமன்னன் இராசேந்திரசோழன் புகழைப் போற்றுவது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.

புதுச்சேரிக்கும் சோழ ஆட்சிக்குமுள்ள தொடர்பு பாகூர் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. திருபுவனை அருகேயுள்ள குண்டாங்குழி மகாதேவர் ஆலயம் தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் சிறுவடிவம் (Miniature) என்கின்றனர் தொல்லியல் அறிஞர்கள். புதுச்சேரி அருகேயுள்ள மரக்காணம் சோழர் காலத்தில் துறைமுகமாக விளங்கியது. இராசேந்திரசோழனின் பிறந்த நாள் விழா நடத்துவது தமிழகத்திற்கு மட்டுமல்ல புதுச்சேரிக்கும் பெருமையுடையதாகும்.

தமிழக முதலமைச்சராக இருந்த போது கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழ் மாமன்னன் இராஜராஜசோழன் பெருமைகளைப் போற்றி விழா எடுத்து பெருமைப்படுத்தி வரலாற்றில் நிலைநிறுத்திக் கொண்டார். தாங்களும் இதேபோல் இராஜராஜசோழனின் மகனான இராசேந்திரசோழனின் பிறந்த நாள் விழா எடுத்து வரலாற்றில் இடம்பெற விழைகிறோம்.

எனவே, தாங்கள் இக்கோரிக்கையைப் பரிசீலித்து தமிழ் மாமன்னன் இராசேந்திரசோழனின் பிறந்த நாளைத் தமிழக அரசு சார்பில் அரசு விடுமுறை அளித்து மிகச் சிறப்பாகக் கொண்டாட உரிய நடவடிக்கை எடுத்திட ‘புதுச்சேரி வரலாற்றுப் பேரவை’ சார்பில் பேரன்புடன் வேண்டுகிறோம்.

இவண்,

கோ. சுகுமாரன், தலைவர், புதுச்சேரி வரலாற்றுப் பேரவை.

செயற்குழு உறுப்பினர்கள்:

முனைவர் நா. இளங்கோ, மேனாள் முதல்வர், தாகூர் அரசு கலை, அறிவியல் கல்லூரி.

பொறிஞர் இரா. தேவதாசு, தமிழ் வரலாற்று ஆர்வலர்.

ஓவியர் இராஜராஜன், மேனாள் பேராசிரியர், பாரதியார் பல்கலைக்கூடம்.

இரா. சுகுமாரன், கணினித் தமிழ் ஆர்வலர்.

சின்ன. சேகர், மேனாள் ஆசிரியர்.

புதுவைத் தமிழ்நெஞ்சன், தனித்தமிழ் ஆர்வலர்.

இரா. சுகன்யா, சமூக ஆர்வலர்.

கோ. சுகுமாரன்

—

செய்தி உதவி:
தமிழ்மகன்,
அரியலூர் சோழதேசம்

Share:

Previous Post

‘நீட்’ எமனைக் கட்டாயப்படுத்தித் திணிப்பது இரக்கமற்ற செயல் – வ.கெளதமன்

Next Post

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான அழகிய தமிழ் மகள்.

Related Articles

அரசியல்இந்தியாகல்விசெய்திகள்தமிழர்கள்வேலைவாய்ப்பு

பல்கலை. ஊழியர்களை குத்தகை முறையில் நியமிக்கும் முடிவை கைவிட வேண்டும்!

அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

டெல்கி உழவர்கள் போராட்டம் 359வது நாள் செய்தி குறிப்பு

மருத்துவர் இராமதாசு அரசியல்இந்தியாஈழம்உலகம்சிறிலங்காசெய்திகள்தமிழ்நாடு

இலங்கைக்கு உதவி: இனச் சிக்கலைத் தீர்க்க நிபந்தனை விதிக்க வேண்டும்!

இந்தியாசெய்திகள்தமிழ்நாடுபெண்கள் பகுதிவேளாண்மை

சென்னையில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு இன்று முற்றுகை போராட்டம் நடத்தியது.

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து செய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மாவட்டங்கள்வேளாண்மை

தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகளை பாதுகாப்பான கிடங்குகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

தேடல்

சமீபத்திய பதிவுகள்

  • மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்.
  • திறவுகோல் 2056 சித்திரை மின்னிதழ்
  • ஐதராபாத்தில் 400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்!
  • பெண்கள் குறித்த அமைச்சர் திரு. பொன்முடி அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
  • புரசைவாக்கம், திடீர்நகர் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை ஓராண்டிற்குள்ளாவது நிறைவேற்ற வேண்டும்!
  • தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி அமைப்புச்சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்து முதல்வர் சிந்திக்க வேண்டும்.
  • தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவர் ஐயா சொல்லின் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் மறைவு
  • பென்னாகரம் இளைஞர் வனத்துறையால் கொல்லப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆணையிடுங்கள்!
  • புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
  • திறவுகோல் 2056 பங்குனி மின்னிதழ்

வேளாண்மை

மன்னார்குடி நம்மாழ்வார் ஏரியை காக்க கோரி பேரணி

மன்னார்குடி நம்மாழ்வார் ஏரியை காக்க கோரி பேரணி.

adminOctober 18, 2024
மன்னார்குடி நம்மாழ்வார் ஏரி

நம்மாழ்வார் குளம்தான் 1950, 60களில் மன்னையின் தெருக்களுக்கு குடிநீர் வழங்கியது.

adminOctober 17, 2024

எல்லா வளங்களையும் அழித்து விட்டு என்ன தொழில் வளர்ச்சி?

adminSeptember 15, 2024

முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாடு உரிமையை காக்க வேண்டும்!

adminAugust 15, 2024
ஐயா மணியரசன்

காவிரி நீரைப் பெற்றுத் தர மாற்று வழியை தமிழ்நாடு அரசு நாட வேண்டும்.

adminJuly 17, 2024

சமீபத்திய பதிவுகள்

  • மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்.
  • திறவுகோல் 2056 சித்திரை மின்னிதழ்
  • ஐதராபாத்தில் 400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்!

தேடல்

சமூக ஊடகங்கள்

| Theme By WPOperation
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு