Home>>உலகம்>>வெளிநாடு செல்ல அனுமதிக்கும் இலக்கமுறை தடுப்பூசி கடவுச்சீட்டை உருவாக்க கனடா அரசு திட்டமிட்டுள்ளது
உலகம்கனடாசெய்திகள்தகவல் தொழிற்நுட்பம்போக்குவரத்து

வெளிநாடு செல்ல அனுமதிக்கும் இலக்கமுறை தடுப்பூசி கடவுச்சீட்டை உருவாக்க கனடா அரசு திட்டமிட்டுள்ளது

ஐரோப்பிய யூனியன் ஒரு தடுப்பூசி கடவுசீட்டு அமைப்பைக் கொண்டுள்ளது, இது ஒன்றிய நாடுகளுக்குள் மக்கள் சுதந்திரமாக பயணிக்க அனுமதிக்கிறது.

அதேபோல், உள்நாட்டு பயன்பாடு மற்றும் சர்வதேச பயணம் ஆகிய இரண்டிற்கும் பல நாடுகள் தடுப்பூசி கடவுசீட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், கனேடிய குடிமக்கள் வெளிநாடு செல்ல அனுமதிக்கும் இலக்கமுறை தடுப்பூசி கடவுசீட்டை உருவாக்க அரசு செயல்பட்டு வருவதாகவும், அது அடுத்த சில மாதங்களில் நடைமுறைக்கு வரும் என்றும் அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.

இந்த கடவுச்சீட்டு உருவாக்கப்படுவதற்கு முன்பு கனடாவின் 10 மாகாணங்கள் மற்றும் மூன்று வடக்கு பிரதேசங்களுடன் பொதுவான அணுகுமுறையை ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் சிறந்த தடுப்பூசி பதிவுகளில் கனடா உள்ளது. ஜூலை 31 வரை, 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 81% மக்கள் குறைந்தது முதல் ஒருவிழுங்கு தடுப்பூசியை பெற்றுள்ளனர் மற்றும் 68 சதவீத மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

செய்தி சேகரிப்பு
இளவரசி இளங்கோவன் , கனடா

Leave a Reply