Home>>உலகம்>>கனடா-இந்தியா இடையேயான விமான சேவை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது
உலகம்கனடாசெய்திகள்போக்குவரத்து

கனடா-இந்தியா இடையேயான விமான சேவை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது

கனடா-இந்தியா இடையேயான விமான சேவை தடை வரும் 2021 செப்டம்பர் 21-ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்திய நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக கனடா-இந்தியா இடையே நேரடி விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

கடந்த 2021 ஏப்ரல் 22-ஆம் திகதி முதலில் அறிவிக்கப்பட்ட இந்த சர்வதேச போக்குவரத்து தடை தற்போது 5-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் டெல்டா வகை வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக வரும் செப்டம்பர் 21-ஆம் திகதி வரை விமானங்கள் தடை செய்யப்படுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

தற்போது அமெரிக்காவின் ஆஸ்டின், டெக்சாஸ், புளோரிடா உள்ளிட்ட பல மாகாணங்களில் வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேலும் நாளொன்றுக்கு ஒரு லட்சம் பேர் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவில் இதனால் ஐந்தாம் கட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்த தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையில், முன்பே அறிவித்தபடி ஆகஸ்ட் 21-ஆம் திகதி கனடா-இந்தியா இடையே விமான போக்குவரத்தை மீண்டும் துவங்க திட்டமிட்டுள்ளதாகவும், இரு தரப்பிலும் அதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

செய்தி சேகரிப்பு
இளவரசி இளங்கோவன் , கனடா

Leave a Reply