Home>>இந்தியா>>தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியது வன்மையாக கண்டிக்கதக்கது
இந்தியாகல்விசெய்திகள்தமிழ்நாடு

தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியது வன்மையாக கண்டிக்கதக்கது

தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியது வன்மையாக கண்டிக்கதக்கது. அப்படைப்புகளை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு.வேல்முருகன் அவர்கள் தனது கட்சியின் சார்பாக வலியுறுத்தியுள்ளார். அவரின் கருத்தை கீழே பகிர்ந்துள்ளோம்.


தமிழ் எழுத்தாளர்களான பாமா, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகளும் ஆங்கில பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. அதே போன்று, பிரபல எழுத்தாளரும் பழங்குடி மக்களின் நலனுக்காக பாடுபட்ட சமூக ஆர்வலருமான மகாஸ்வேதா தேவியின் சிறுகதை படைப்புகளும் நீக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் தேர்வுக்குழு ஆலோசனைக்கு பிறகு எழுத்தாளர்களின் கவனத்திற்கு செல்லாமல் இந்த பாடத்திட்டங்கள் இரவோடு இரவாக நீக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது.

டெல்லி பல்கலைக்கழகத்தின் இத்தகைய நடவடிக்கைக்கு பின்புலத்தில் தமிழின விரோதப் போக்கு அரங்கேறியுள்ளது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

தொல்லியல் பட்டயப்படிப்புத் தேர்வில் தமிழ் புறக்கணிப்பு, நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக இல்லாதது, தமிழ்நாட்டில் தமிழ் இல்லாப் பள்ளிக்கூடங்கள், தொலைக்காட்சியில் சமற்கிருதச் செய்தித் திணிப்பு, பேரிடர் எச்சரிக்கைகூடத் தமிழில் தர மறுப்பு, தமிழ்மொழிக்கு குறைவான அளவில் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தமிழர்களுக்கு எதிராக, தமிழ்மொழிக்கு எதிராக மோடி அரசு ஈடுபட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக தான், டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டுள்ளது.

இப்படியான சதிச்செயல்களை நிறைவேற்றவே, அரசு அலுவலகங்கள், தொல்லியல்துறை, கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆர்.எஸ்.எஸ், பாஜகவினரை நிரப்பியுள்ளது மோடி அரசு.

எனவே, தமிழின விரோதப் போக்கை கைவிட்டு, டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் நீக்கப்பட்ட தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. மேலும், டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டது குறித்தும் விளக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

Leave a Reply